கடலில் குளிக்கச் சென்ற மூன்று இளைஞர்கள் சடலமாக மீட்பு

0
159

water deathகடலில் குளிக்கச் சென்று காணாமல் போன மூன்று பேரை கடற்படையினர் இன்று (19) மாலை சடலமாக மீட்டுள்ளனர்.

கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த தேவராஜா சாருஜன் (23 வயது) தேவராஜா சஞ்சயன் (22வயது) மற்றும் உதயகுமார் பகிரதன் (21வயது) ஆகிய மூவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

நயீனாதீவு ஆலயத்தின் தேர்த் திருவிழா இன்று காலை இடம்பெற்றது. இதன் போது ஆலயத்துக்கு சென்ற இளைஞர்கள் மூவர் ஆலயத்துக்கு அண்மையில் இருந்த கடலில் குளிக்கச் சென்றுள்ளனர்.

இவ்வாறு குளிக்க சென்றவர்கள் கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போய் இருந்தனர். இதனையடுத்து அவர்களை மீட்கும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டிருந்தனர்.

மிக நீண்ட தேடுதல் நடவடிக்கையின் பின்னர் குறித்த மூவரது சடலங்களையும் இன்று மாலை 4.00 மணியளவில் கடற்படையினர் மீட்டிருந்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் இருவர் சகோதரர்கள் என்பதுடன் மற்றைய நபர் அவர்களது நண்பர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

#Virakesari

LEAVE A REPLY