நான் வெடிகுண்டு வைத்திருக்கிறேன்: டெல்லி சர்வதேச விமான நிலையத்தை பீதியடையவைத்த காஷ்மீர் மாணவி

0
155

201606191730295030_I-have-a-bomb-message-on-Kashmiri-girls-bag-creates-panic-at_SECVPFகாஷ்மீரை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் வாங்காளதேசத்தில் இருந்து தனது சொந்த ஊரான ஸ்ரீநகருக்கு விமானம் மூலம் செல்லும் போது விளையாட்டாக செய்த ஒரு காரியம், டெல்லி சர்வதேச விமான நிலையத்தை பரபரப்புக்கு உள்ளாக்கும் என்றும், தன்னை பல மணிநேரம் புலனாய்வு அதிகாரிகளின் கேள்விகள் துளைக்கும் என்றும் எதிர்பார்த்திருக்க மாட்டார்.

வாங்காளதேசத்தில் இருந்து கொல்கத்தா வந்து அங்கிருந்து டெல்லி விமானம் நிலையம் வந்தடைந்த அந்த மாணவி, ஸ்ரீநகர் விமானத்திற்காக காத்திருக்கையில் தனது கருப்பு நிற கைப்பையின் மேல் வெள்ளை நிற இங்கால் “ இதில் வெடிகுண்டு இருக்கலாம்” என்று எழுதியுள்ளார். அந்த பெண்ணின் கைப்பையை கவனித்த பாதுப்புபடை வீரர்கள் அவரை கைது செய்து, புலனாய்வு அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர்.

இதனை அடுத்து புலனாய்வு அதிகாரிகள் அவரிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தினார்கள். ஆனால் அவர்கள் கேட்ட அனைத்து கேள்விக்கு அந்த பெண் அளித்த பதில் “ கல்லூரியில் புத்தகங்களை வெடிகுண்டு என்று விளையாட்டாக குறிப்பிடுவோம். அதைதான் நான் எழுதினேன்” என்பதுதான்.

நிண்ட விசாரணையின் காரணமாக அந்த பெண் தனது விமானத்தை தவறவிட்டார். பிறகு இரவு டெல்லியில் உள்ள ஜம்மு காஷ்மீர் பவனில் தங்கிவிட்டு இன்று காலைதான் சொந்த ஊருக்கு சென்றுள்ளார்.

LEAVE A REPLY