கழுத்தில் பந்து தாக்கியதால் வங்காள தேச கிரிக்கெட் வீரர் மருத்துவமனையில் அனுமதி

0
20

201606181839124096_Bangladesh-cricketer-hospitalised-after-being-struck-on-the_SECVPFவங்காள தேசத்தில் ‘ஏ’ பிரிவு அணிகளுக்குகிடையிலான டாக்கா பிரீமியர் லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இன்று விக்டோரியா ஸ்போர்ட்டிங் கிளப் சார்பில் ஆல்-ரவுண்டர் சுரவாடி ஷூவோ பேட்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது பவுன்சராக வந்த பந்து ஒன்று அவரது கழுத்தை பதம் பார்த்தது. அப்போது அவர் ஹெல்மெட் அணிந்திருக்கவில்லை. காயமடைந்த அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்றுக்கொண்டிரும் அவர் அபாய கட்டத்தில் இருந்து மீண்டுவிட்டார்.

சுரவாடி ஷூவோ காயம் குறித்து வங்காள தேச கிரிக்கெட் அணியின் தலைமை பிசியோதெரபி டாக்டர் டெபாஷிஷ் சவுத்ரி கூறுகையி்ல ‘‘தற்போது சுரவாடி ஷூவோ நிலைமை சரியாகிவிட்டது. இருந்தாலும் தீவிர கண்காணிப்பில்தால் இருக்கிறார். அவரது தலையில் ஏதும் அடி பட்டிருகிறதா என்பதை பார்க்க, 24 மணி நேரம் அவரை நாங்கள் கண்காணிக்க இருக்கிறோம்.

புதிய விதிமுறைப்படி ஹெல்மெட் அணிந்து விளையாடி இருந்தால் அவருக்கு பாதுகாப்பாக இருந்திருக்கும். அவருக்கு நான்கு பரிசோதனைகள் எடுக்கப்பட்டது. இதில் மூன்றில் எந்த பிரச்சினையும் இல்லை. கண் குறித்த பரிசோதனையில் மட்டும் கவலையளிக்கும் வகையில் உள்ளது’’ என்றார்.

LEAVE A REPLY