இந்தோனேசியாவில் தொடர் மழை – வெள்ளத்துக்கு 24 பேர் பலி

0
119

201606191447498149_Flash-floods-kill-24-in-Indonesia-thousands-of-homes_SECVPFஇந்தோனேசியா நாட்டின் மத்திய ஜாவா மாகாணத்தில் தொடர்ந்து பெய்துவரும் மழையினால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தோனேசியா நாட்டில் உள்ள மத்திய ஜாவா மாகாணத்துக்குட்பட்ட 16 தாலுகாக்களில் நேற்றிரவில் இருந்து கனத்த மழை பெய்து வருகிறது. மழையின் விளைவாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி 24 பேர் உயிரிழந்துள்ளனர். இப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

வெள்ளத்தில் சிக்கி காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டுள்ள சுமார் 30 பேரை தேடும் பணியில் மீட்புப் படையினருடன், ராணுவம், காவல்துறை மற்றும் உள்ளூர்களை சேர்ந்த தொண்டு நிறுவனத்தினரும், பொதுமக்களும் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

LEAVE A REPLY