ஸ்ரீலங்கா ஷெட் நிறுவனத்தினால் 500 குடும்பங்களுக்கு சிறந்த ரக பேரீச்சம் பழங்கள் வழங்கி வைப்பு

0
139

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

05464447-fdb0-4d9a-8fa1-42cbc209ac09ஸ்ரீலங்கா ஷெட் நிறுவனத்தினால் 500 குடும்பங்களுக்கு தலா ஒரு கிலோகிராம் நிறை கொண்ட சிறந்த ரக பேரீச்சம் பழங்கள் ஞாயிறன்று (ஜுன் 19, 2016) வழங்கி வைக்கப்பட்டதாக ஏறாவூர் அபிவிருத்திக்கும் வலுவூட்டலுக்குமான மனித சேவைகள் நிறுவனத்தினால் அதன் தலைவர் கே. அப்துல் வாஜித் தெரிவித்தார்.

மத்திய கிழக்கின் பரோபகாரி ஒருவரால் இந்த சிறந்த ரக பேரீச்சம் பழங்கள் நன்கொடையாக நோன்பாளிகளான ஏழைக்கு வழங்கி வைக்குமாறு அனுப்பி வைக்கப்பட்டதாக அப்துல் வாஜித் மேலும் தெரிவித்தார்.

ஏறாவூர் ஷெட் நிறுவன அலுவலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா ஷெட் நிறுவனத்தின் தலைவர் கே. அப்துல் வாஜித், பணிப்பாளர் சபை உறுப்பினரும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரியுமான ஏ.டபிள்யூ.எம் பவுஸ், நிருவாகக் குழுவைச் சேர்ந்த எம்.எல். பெரோஸ், ஏ.எம்.எம். நஸ{ர்தீன் உட்பட பயனாளிகளும் கலந்து கொண்டனர்.

0ada209c-b314-41c9-9e8c-6f3c846eda62

3b99e1c7-f931-48d4-b400-0301fcb0b2e6

LEAVE A REPLY