ஜிம்பாப்வே வீரர் கடைசி பந்தை மிகவும் அபாரமாக வீசினார்: டோனி

0
134

201606191230493210_Zimbabwe-player-throwing-the-last-ball-was-brilliant-Dhoni_SECVPFஜிம்பாப்வே அணிக்கு எதிரான 20 ஓவர் ஆட்டத்தில் இந்தியா அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவியது. முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 170 ரன் எடுத்தது. சிங்கும்புரா 26 பந்தில் 54 ரன்னும் (1 பவுண்டரி, 7 சிக்சர்), ஹலர் 30 ரன்னும் எடுத்தனர். பும்ரா 2 விக்கெட்டும், அக்‌ஷர் பட்டேல், ரிஷிதவான், யசுவேந்திரா சஹிப் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் விளையாடிய இந்திய அணி 20 ஓவரில் 168 ரன் எடுத்தது. இதனால் 2 ரன்னில் தோற்றது. மனிஷ் பாண்டே அதிகபட்சமாக 48 ரன்னும், மந்திப்சிங் 31 ரன்னும் எடுத்தனர். சிபாபா, முஜாரா, பாலி தலா 2 விக்கெட்டும், டிரிபோளா, மட்ஸிவா தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

ஆட்டத்தின் கடைசி பந்தில் இந்தியாவின் வெற்றிக்கு 4 ரன் தேவைப்பட்டது. களத்தில் இருந்த டோனியால் ஒரு ரன்னே எடுக்க முடிந்தது. இது மிகவும் ஏமாற்றத்தை அளித்தது.

இந்த தோல்வி குறித்து டோனி கூறியதாவது:-

இறுதியில் பேட்டுக்கும், பந்துக்கும் இடையே போட்டி ஏற்பட்டது. ஜிம்பாப்வே வீரர் மட்ஸிவா கடைசி பந்தை மிகவும் அபாரமாக வீசியதாக கருதுகிறேன்.

இளம்வீரர்கள் ஏராளமான தவறுகளை செய்தனர். அனுபவம் இல்லாத அவர்களது ஷாட், கேட்ச் பயிற்சி போல் இருந்தது. பல்வேறு பிழைகளில் இருந்து அவர்கள் பாடம் கற்றார்கள் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

வெற்றி குறித்து ஜிம்பாப்வே கேப்டன் சிரிபெர் கூறும்போது, ஒருநாள் தொடரை இழந்ததால் எங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இந்த வெற்றி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

இந்த வெற்றி மூலம் 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஜிம்பாப்வே 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 2-வது ஆட்டம் நாளை நடக்கிறது.

LEAVE A REPLY