நோயாளிகளுக்கு விழிப்புணர்வு

0
139

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

அனைத்துலக புகைத்தல் மற்றும் போதைப் பொருள் தவிர்ப்பு மாதத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் நகர சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் முதன் முறையாக நோயாளிகளுக்கும் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எம்.எச்.எம். தாரிக் தெரிவித்தார்.

இந்த விழிப்புணர்வு திங்கட்கிழமை (ஜுன் 20, 2016) ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் காலை 9 மணியிலிருந்து இடம்பெறவுள்ளது.

புகைத்தல் மற்றும் போதைப் பொருள் தவிர்ப்பு மாதம் ஜுன் 01 ஆம் திகதி தொடக்கம் ஜுன் 31 ஆம் திகதி வரை அனுஸ்டிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY