விலை மதிப்பிட முடியாத புராதன மன்னர்கள் காலத்து தொல்பொருட் பொக்கிசங்களை பதுக்கி வைத்திருந்த நால்வர் ஏறாவூரில் கைது

0
102

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

arrestedவிலை மதிப்பிட முடியாத புராதன மன்னர்கள் காலத்து தொல்பொருட் பொக்கிசங்களை பதுக்கி வைத்திருந்த நால்வர் ஏறாவூரில் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிராந்திய புலனாய்வுப் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின்படி ஏறாவூர் மிச்நகர் பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு சுற்றிவளைப்பை மேற்கொண்டபொழுது புராதன காலத்து மன்னர்கள் பாவித்த விலை மதிப்பிட முடியாத தொல்பொருட் பொக்கிசப் பொருட்களுடன் நால்வர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இப்பொருட்கள் வவுனியா பிரதேசத்திலிருந்து வேறு இடங்களுக்கு கடத்தப்படுவதற்காக ஏறாவூருக்குக் கொண்டு வந்து மிக இரகசியமான முறையில் மறைத்து வைக்கப்படிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள நால்வரும் ஏறாவூர் நகர் மற்றும் மிச்நகர் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் கூறினர்.

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளில் புலனாய்வுப் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

LEAVE A REPLY