தற்கொலையை அனுமதித்து புதிய சட்டம்

0
91

doctorsகனடா நாட்டில் குணப்படுத்த முடியாத நோயில் தத்தளிக்கிறவர்கள் மருத்துவர்கள் உதவியுடன் தற்கொலை செய்து கொள்ள அனுமதி அளித்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

கனடா நாட்டில் குணப்படுத்த முடியாத நோயில் தத்தளிக்கிறவர்கள், உயிரைப் போக்கிக்கொள்வதற்கு வைத்தியர்கள் உதவ விதிக்கப்பட்டிருந்த தடையை உச்ச நீதிமன்றம் அகற்றியது.

இதைத் தொடர்ந்து அங்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு, மரணப்படுக்கையில் அவஸ்தைப்படுகிற நோயாளிகள், மருத்துவர்கள் உதவியுடன் தற்கொலை செய்து கொள்ள அனுமதி அளித்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத்துக்கு அந்த நாட்டின் பாராளுமன்றம் ஒப்புதல் அளித்து விட்டது.

அதே நேரத்தில் இந்த புதிய சட்டம் மிகுந்த கட்டுப்பாடுகளை கொண்டிருப்பதாக விமர்சனமும் எழுந்துள்ளது. இது தொடர்பாக அரசு அதிகாரிகள் குறிப்பிடும்போது, ‘இந்த சட்டம் முதல் கட்ட நடவடிக்கைதான். எதிர்காலத்தில் இது விரிவுபடுத்தப்படும்’ என கூறினர்.

இதேபோன்று நோயாளிகள், மருத்துவர்கள் உதவியுடன் மரணத்தை தாமே தேடிக்கொள்ள அனுமதி அளிக்கும் சட்டம் சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, அல்பேனியா, கொலம்பியா, ஜப்பான் ஆகிய நாடுகளில் உள்ளது. இப்போது அந்த நாடுகளின் வரிசையில் கனடாவும் சேர்ந்துள்ளது.

#Adaderana

LEAVE A REPLY