பிரதேசம் பூராகவும் ஈத்தம்பழ விநியோகம்; இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் அன்பளிப்பில்!

0
149

(முஹம்மட் பயாஸ்)

WhatsApp-Image-20160619 (3)காத்தான்குடி பிரதேசம் பூராகவும் அதனை அண்டிய அயல் கிராமங்களிலும் வாழ்கின்ற மக்களுக்கும் கிடைக்கத்தக்க வகையில் ஈத்தம்பழ விநியோகம் இன்று (19) இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் ஹிரா பெளண்டேசன் காரியாலயத்தில் வைத்து ஒவ்வொரு பள்ளிவாயல் நிருவாகத்தினரிடமும் ஒப்படைக்கப்பட்டது.

புனித ரமழான் காலங்களில் நோன்பு நோற்ற மக்கள் சிறந்த முறையில் தரமான ஈத்தம்பழங்களுடன் நிறைவாக தமது நோன்பினை திறக்க வேண்டும் என்பதற்காகவும் ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசமின்றி அனைவரும் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் சிறந்த நெறியாள்கையுடன் வழங்கப்பட்டது.

எனவே இவ் ஈத்தம் பழங்கள் மீழ்குடியேற்ற புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் MLAM. ஹிஸ்புல்லாஹ்வினால் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

அதே வேளையில் இவ் ஈத்தம்பழங்கள் சிறந்த தரமானதும் ஒவ்வொரு பள்ளிவாயலின் மகல்லா வாசிகளும் நிறைவாக பயன்படுத்தக்கூடிய நிறைகளில் வழங்கப்பட்டமையும் சிறப்பம்சமாகும்.

WhatsApp-Image-20160619 (6)

WhatsApp-Image-20160619 (1) WhatsApp-Image-20160619 (4) WhatsApp-Image-20160619 (5) WhatsApp-Image-20160619

LEAVE A REPLY