(Poem) சலாம்கள்

0
47

(Mohamed Nizous)

அஸ்ஸலாமு அலைக்கும்
ஆங்காங்கே ஒலிக்கும்
இச் சலாம் எதற்காக
என்று மனம் கேட்கும்.

தன் கொள்கை வாதியெனின்
தாராள பதில் கிடைக்கும்
சொன்னவர் மாற்றார் எனின்
சுருக்கமாய் பதில் கிடைக்கும்.

பள்ளியின் முன்னாலே
படையெடுத்து நிற்போர்கள்
சொல்லிடும் சலாம்கள்
சொச்சத்தை எதிர்பார்க்கும்.

பெண் ஐடி கண்டால்
பேஷ்புக்கில் சலாம்கள்
வண்ண அனிமேஷன்களில்
வகை வகையாய் ஜொலிக்கும்.

மத்திய குழுக்கூட்டம்
மாபெரும் மா நாடு
அத்தனையிலும் சலாம் ஒலிக்கும்
சத்தத்தை டெஸ்ட் பண்ண

பேசிய பெண்ணுக்கு
பிரியமாய் சொன்ன சலாம்
ஆசை முடிந்த பின்னால்
அட்ரஸ் இன்றித் தொலைந்து விடும்

திடீரென்று ஒருவர்
தெருவிலே சலாம் சொன்னால்
கடன் தொகை கேட்க
கனெக்ஸன் உருவாகும்.

ஆபிஸ்க்கு வருவோர்கள்
அடையாளம் கண்டு கொண்டால்
ஆபிதாய் சலாம் உரைப்பார்
அப்புறம் உதவி கேட்பார்.

எதிர்பார்ப்பு ஏதுமின்றி
இறைவனுக்காய் சொல்கின்ற
அதி சிறந்த சலாம்களே
அளப் பெரும் நன்மை தரும்.

LEAVE A REPLY