சுசந்திகா ஜயசிங்க மீது தாக்குதல்: அவரின் கணவர் கைதாகி பிணையில் விடுதலை

1
232

Susanthika_CIஒலிம்பிக் பதக்கம் வென்ற வீராங்கனையான சுசந்திகா ஜயசிங்க, அவரின் வீட்டில் இடம்பெற்ற தாக்குதலில் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அவரின் கணவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

கம்பஹா – வெலிவேரிய பிரதேசத்தில் அமைந்துள்ள வீட்டில் தாக்குதலுக்கு இலக்கான சுசந்திகா ஜயசிங்க, சிகிச்சைகளுக்காக கம்பஹா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் சுசந்திகா ஜயசிங்கவின் கணவர் கைது செய்யப்பட்டு, கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, தலா ஒரு இலட்சம் பெறுமதியான இரண்டு சரீரப்பிணைகளில் அவர் இன்று விடுவிக்கப்பட்டார்.

மாதாந்தம் முதலாம் மற்றும் இறுதி ஞாயிற்றுக்கிழமை காலை வெலிவேரிய பொலிஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் எனவும், எதிர்வரும் 23 ஆம் திகதி நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜராக வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

-NF-

1 COMMENT

  1. எவ்வளவு மதிப்புமிக்க பதக்கம் வென்றாலும் குடும்ப வாழ்க்கையில் தோல்வியே!!!!

LEAVE A REPLY