சம்மாந்துறை பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கான இப்தார் நிகழ்வு

0
182

(எம்.எம்.ஜபீர்)

99e5b612-190e-4e7c-9de4-9c898e322850சம்மாந்துறை பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கான இப்தார் நிகழ்வு சம்மாந்துறை மாஹிர் பவுண்டேசனின் ஏற்பாட்டில் அதன் அமைப்பின் தலைவர் வை.வீ.சலீம் தலைமையில் இன்று சனிக்கிழமை (18) சம்மாந்துறை தாறுஸ்ஸலாம் மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர், கிழக்கு மாகாண பாலர் பாடசாலை கல்வி பணியகத்தின் தவிசாளர் பொன்.செல்வநாயகம், பாலர் பாடசாலை கல்வி பணியகத்தின் அம்பாரை மாவட்ட பணிப்பாளர் கே.எம்.சுபைர், சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் ஏ.ஏ.சலீம், சம்மாந்துறை கோட்டக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.சபூர் தம்பி, பாலர் பாடசாலை கல்வி பணியகத்தின் அம்பாரை மாவட்ட வெளிக்கள உத்தியோகத்தர் எஸ்.எம்.றிஸான், தாறுஸ்ஸலாம் மகா வித்தியாலய அதிபர் ஏ.எச்.இஸ்மாயில், யு.யுனைதீன் பாலர் பாடசாலைகளின் ஆசிரியர்கள், உயர் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

இங்கு ரமழான் விசேட சிறப்பு உரையினை சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலக ஆசிரிய ஆலோசகர் மௌலவி எம்.ஐ.ஹஜ்ஜி முஹம்மட் நிகழ்த்தினார்.

6c1ad947-885d-498d-abef-2c0d329dd8f1

44ad700a-39b9-4960-96f2-a36b57791b69

LEAVE A REPLY