மும்பையில் ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட 22 வயது பெண்

0
149

Untitled-1-1மும்பையில் ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட 22 வயது பெண் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தார். கடந்த வியாழக்கிழமை கல்யாணில் இருந்து தாகுர்லி வரை சென்ற ரயிலில் ரேக்ஹா என்ற 22 வயது பொறியியல் மாணவி தனது தாயுடன் கோரக்பூர் எக்ஸ்பிரஸில் பெண்கள் பெட்டியில் பயணித்து உள்ளார்.

அப்போது தினேஷ் யாதவ் என்ற நபர் தனது மனைவியையும், குழந்தையையும் பார்க்க அப்பெட்டிக்கு வந்துள்ளார். அவர் அந்த பெட்டியில் ஏறும் போது கதவு அருகே அமர்ந்திருந்த ரேக்ஹாவுக்கும், தினேஷுக்கும் தகராறு ஏற்பட்டது.

இதனால் ரேக்ஹா ரயில்வே காவல் அதிகாரியிடம் புகார் அளித்தார். ரயில்வே போலீசார் தினேஷை அந்த பெட்டியில் இருந்து இறக்கவிட்டனர். ஆனால் ரயில் புறப்படும் போது மீண்டும் தினேஷ் அந்த பெட்டியில் ஏறி ரேக்ஹா மற்றும் ரேக்ஹாவின் தாயாரிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டார்.

தகராறு முற்றிப்போகவே தினேஷ் ரேக்ஹவின் தாயார் சரிதாவை தள்ளி விட்டார், இதில் சரிதா ரயிலின் கதவில் இடித்துக்கொண்டு கீழே விழுந்தார், இதை தட்டிக்கேட்ட ரேக்ஹவை, தினேஷ் ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளி விட்டார்.

கீழே விழுந்து மண்டையில் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய ரேக்ஹவை தண்டவாளத்தை கடந்து செல்லும் போது பார்த்த அமித் என்ற தனியார் வங்கியாளர் உடனடியாக அவரை மீட்டு கல்யாணில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

அங்கு ரேக்ஹா தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தற்போது பொதுபிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். இதனையடுத்து போலீசார் தினேஷ் யாதவ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

LEAVE A REPLY