(Video) கிழக்கிற்கு முஸ்லிம் முதலமைச்சரை நியமித்தலில் ஷிப்லி பாரூக்கின் தியாகம் முக்கியமானதாகும்: அமைச்சர் ஹக்கீம்

1
148

 (அஹமட் இர்ஷாட்)

9af73a3b-f4f9-4a6b-88f4-e64933735565இன்று கிழக்கு மகாணத்திலே முஸ்லிம் முதலமைச்சர்ஒருவர் அரசியல் அதிகாரத்துடன் காணப்படுகின்றார் என்றால் அதற்கு முக்கிய காரணம் பொறியியலாளர் ஷிப்லி பாரூக் என சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் அப்துர் ரவூப் ஹக்கீம் சில மாதங்களுக்கு முன்னர் பாலமுனையில் இடம்பெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பகிரங்கமாக தெரிவித்தார்.

தொடர்ந்து அங்கு உரையாற்றிய அமைச்சர் அப்துர் ரவூப் ஹக்கீம்,

கடந்த காலத்தில் கிழக்கு மாகானத்திற்கு முஸ்லிம் முதலமைச்சரினை பெற்றுக்கொள்வதில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு பாரிய சவால் விடுக்கப்பட்டிருந்தது. முஸ்லிம் காங்கிரசினால் தேவையான பெரும்பான்மை உறுப்பினர்களை காட்டும் விடயத்தினை தடுக்கும் முறையில் எமது கட்சியினை பிளவுபடுத்துவதற்கு துடித்துக் கொண்டிருக்கும் பிரதானமான அரசியல் புள்ளி அதற்கு பின்னால் இருந்து கொண்டு 24 மணித்தியாளங்களும் தொழில்பட்டு கொண்டிருந்தார்.

ஏன்னென்றால் அவருடைய மாவட்டத்தினை சேர்ந்தவரும், அவரினுடைய ஊரினை சேர்ந்தவரும் முதலமைச்சராக வந்து விடக்கூடாது என்பதற்காகவே என சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தவிசாளர் பசீர் சேகுதாவூத்தினை மறைமுகமாக அமைச்சர் அப்துர் ரவூப் ஹக்கீம் தாக்கியதனை எளிதாக புரிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது.

அந்தவகையிலே அவர் கட்சியில் உள்ள பலரினை பலவாறு நெருக்கடிக்கு உள்ளாக்கியும் அவரினால் அதனை சாதித்துக்கொள்ள முடியாமைக்கான முக்கிய காரணம் அப்பொழுது உறுதியான முறையில் செயற்பட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரசின் மாகாண சபை உறுப்பினரான பொறியியலாளர் ஷிப்லி பாரூக் முஸ்லிம்களுக்கான முதலமைச்சர் என்னும் பதவியினை இல்லாமல் செய்வதற்கு நான் துணைபோக முடியாது என்ற ஒரே சமூதாயத்தினை முன்னிலைப்படுத்திய நல்ல நோக்கத்திற்காக அவருடைய கட்சியினை உதறித்தள்ளி விட்டு எங்களுடன் வந்து கைகோர்த்துள்ளார் என அமைச்சர் அப்துர் ரவூப் ஹக்கீம் பகிரங்காமக ஷிப்லி பாருக்கினை பற்றி உரையாற்றியாற்றினார்.

இதனை யதார்த்த ரீதியிலும், தூர நோக்கத்துடனும் பார்க்கின்ற பொழுது அம்பாறை மாவட்டத்து முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் மத்தியில் பொறியலாளர் ஷிப்லி பாரூக்கினை வைத்து கொண்டு SLMC தலைவர் அப்துர் ரவூப் ஹக்கீம் அவ்வாறு உரையாற்றியமையானது எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவிற்கு பிறகு காத்தான்குடியிலும், மட்டக்களப்பு மாவட்டத்திலும் முஸ்லிம் காங்கிரசினை வழி நடாத்தி செல்ல கூடிய கட்சியின் தலைமைத்துவதற்கு விசுவாமான ஒரு அரசியவாதியாகவே தலைமைத்துவமும், கட்சியியும் பொறியியலாளர் ஷிப்லி பாரூக்கினை இனம் கண்டிருக்கின்றது என்ற கருத்தினை பலமான முறையில் உணர்த்தி நின்றது.

அது மட்டுமல்லாமல் முதலமைச்சர் அல்ஹாபிழ் நசீர் அஹமட் தான் கிழக்கு மாகாணத்திலே மேற்கொள்ளும் அனைத்து அபிவிருத்தி திட்டங்களிலும் பொறியியலாளர் ஷிப்லி பாரூக்கினை அரவனைத்துக்கொண்டே தனது நடவடிக்கைகளை காத்தான்குடி, ஏறாவூர், கல்குடா மற்று மாகாணம் முழுவதும் மேற்கொள்வதானது, பாலமுனையில் SLMC தலைவர் உறையாற்றியதனை இன்னும் பலப்படுத்தும் விடயமாக அமைகின்றது.

அத்தோடு பொறியியலாளர் ஷிப்லி பாரூகின் அரசியல் முன்னெடுப்புக்களும் அபிவிருத்திகளும் காத்தான்குடியினை மட்டும் மையப்படுத்தி நிற்காமல் பிரதேசவாதத்திற்கு அப்பாற்பட்டும் இன, மத மொழி வேறுபாட்டிற்கு அப்பாற்பட்டும் ஏறாவூர், கல்குடா, மாவட்டம் முழுமையாக போன்ற பிரதேசங்களிலும் முன்னெடுக்கப்படுவதனால் சிப்லி பாரூகினுடைய செல்வாக்கானது அண்மைகாலமாக கல்குடா பிரதேச முஸ்லிம் காங்காரஸ் அதரவாளர்கள் மத்தியில் அதிகரித்து காணப்படுகின்றது.

1 COMMENT

  1. கட்சிக்கு பெயர் எடுத்துக் கொடுக்க சேவையை செய்ய வேண்டாம். plss!!!!!

LEAVE A REPLY