அல்-இக்றா பாலர் பாடசாலைக்கு நீர்த்தாங்கி அன்பளிப்பு

0
166

(M.T. ஹைதர் அலி)

அண்மையில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாரூக் மட்டக்களப்பு மாவட்டத்தின் பாலமுனை கிராமத்தில் அமைந்துள்ள அல்-இக்றா பாலர் பாடசாலைக்கு திடீர் விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார்.

அப்பாடசாலையின் குறைநிறைகளை கேட்டறிந்த பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கிடம் இங்குள்ள மாணவர்களும், ஆசிரியர்களும் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான நீர் வசதியின்றி துண்பப்படுவதாகவும் இப்பிரச்சினையை நிவர்த்தி செய்து தருமாறும் ஆசிரியர் மற்றும் பெற்றோர்களால் கோரிக்கை விடுக்கப்பப்பட்டது.

இவ்விடயத்தினை கருத்திற்கொண்டு உடனடியாக செயற்பட்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தனது தனிப்பட்ட நிதியிலிருந்து நீர்த்தாங்கி ஒன்றை அன்பளிப்புச் செய்ததுடன், இப்பாலர் பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் நீர்வசதி கிடைப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்துகொடுத்தார்.

அடிப்படைத் தேவைப்பாடாகக் காணப்பட்ட நீர்த்தேவையினை நிவர்த்தி செய்து கொடுத்தமைக்காக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாரூக்குக்கு ஆசிரியர் மற்றும் பெற்றோர்கள் தங்களது நன்றியினை தெரிவித்துக்கொண்டனர்.

10cd0314-1b06-47cd-98be-a45902a86630

53b23094-1803-4b62-8867-16745c97a80a

9525e514-c2c3-43d3-bb31-ddb1cbb0a31d

a30cd8c3-afda-4761-9003-9de351e908e5

LEAVE A REPLY