8 வயது சிறுமிக்கு சூடு: தந்தை கைது

0
106

imageஇந்தியாவில் பொள்ளாச்சி அருகே உள்ள நெகமம் அடுத்த சூலூர் ஜெய்கிருஷ்ணா புரத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். டூவிலர் மெக்கானிக். இவரது மனைவி சுதா (வயது 28). இவர் குடிமங்கலம் பகுதியில் தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார்.

இவர்களுக்கு காயத்ரி (8), காமேஷ் (2½) என்ற 2 குழந்தைகள் உள்ளனர். காயத்ரி 3-ம் வகுப்பு படித்து வருகிறாள். நேற்று இரவு சுதா, மில் வேலைக்கு சென்று விட்டார்.

இரவில் கோவிந்தராஜ் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார்.

அப்போது வீட்டில் தூங்கி கொண்டிருந்த சிறுமி காயத்ரி அருகே அவர் சென்றார். திடீரென அவர் காயத்ரியை காதை திருகி கொண்டு மேலே தூக்கினார்.

இதில் சிறுமி அலறினார். பின்னர் சிறுமியின் 2 கன்னத்திலும் இரும்பு கம்பியால் சூடு போட்டார். இதில் சிறுமி காயத்ரி வலி தாங்க முடியாமல் கூச்சல் போட்டாள்.

இந்த சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்தனர். அப்போது சூடு வைத்ததால் சிறுமி கதறி அழுவதை கண்டு அவர்கள் திடுக்கிட்டனர். உடனே இந்த சம்பவம் பற்றி அவர்கள் சுதாவுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனால் அவர் பதறியடைத்து வீட்டுக்கு ஓடி வந்தார்.

மகளின் கன்னத்தில் கணவர் குடிபோதையில் சூடு வைத்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் சிறுமி காயத்ரியை சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இந்த சம்பவம் குறித்து அவர் நெகமம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கோவிந்தராஜை கைது செய்தனர்.

கைதான அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

குடிபோதையில் பெற்ற மகள் என்றும் பாராமல் தந்தை சூடு வைத்த சம்பவம் பொள்ளாச்சி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY