சட்ட விரோத மதுபானம் விற்ற குற்றச்சாட்டில் பெண் கைது

0
24

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

சட்டவிரோத மதுபானம் விற்ற குற்றச்சாட்டின் பேரில் மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள இலுப்படிச்சேனையில் குடும்பப் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக மட்டக்களப்பு மாவட்ட போதைப் பொருள் ஒழிப்புப் பொலிஸார் தெரிவித்தனர்.

நீண்டகாலமாக சம்பந்தப்பட்ட பெண் சட்டவிரோத சாராய விற்பனையில் ஈடுபடுகின்றார் என பொது மக்களிடம் தகவல் கிடைத்ததன் பேரில் வெள்ளிக்கிழமை இரவு சுற்றிவளைப்பை மேற்கொண்டபோது இலுப்படிச்சேனை – பாலர்சேனை எனுமிடத்திலுள்ள வீடொன்றில் வைத்து 750 மில்லி லீற்றர் கொண்ட இரு சாராய போத்தல்களுடன் 55 வயதான குடும்பப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட போதைப் பொருள் ஒழிப்புப் பொலிஸ் பிரிவு பொலிஸ் பரிசோதகர் எம்.ஐ. அப்துல் வஹாப் தலைமைலான பொலிஸ் குழுவினர் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டிருந்தனர்.

இச்சம்பவம் பற்றி பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY