14வது முறையாக அவுஸ்திரேலியா சாம்பியன்

0
125

625.0.560.320.500.400.194.800.668.160.90சாம்பியன்ஸ் கிண்ணம் ஹாக்கி தொடரின் இறுதி ஆட்டத்தில் உலக சாம்பியன் அவுஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்த இந்திய அணி முதன்முறையாக வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது.

ஆண்களுக்கான 36வது சாம்பியன்ஸ் கிண்ணம் ஹாக்கி தொடர் கடந்த 10-ஆம் திகதி லண்டனில் தொடங்கியது.

இதில் இந்தியா,அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, ஜெர்மனி, பெல்ஜியம், தென் கொரியா என 6 அணிகள் பங்கேற்றன.இதன் பைனலில் ஆஸ்திரேலியா, இந்தியா அணிகள் மோதின.

13 முறை சாம்பியனான பலம் வாய்ந்த அவுஸ்திரேலியாவுடன் இந்திய அணி நேற்று இறுதிப்போட்டியில் மோதியது.

ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் கோல் அடிக்காததால், ‘பெனால்டிசூட் அவுட்’ முறை கடைபிடிக்கப்பட்டது.இதில் இந்திய அணி 1-3 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. இதன்மூலம் இத்தொடரில் முதன்முறையாக வெள்ளிப் பதக்கம் வென்றது.

இந்திய அணி கடைசியாக கடந்த 1982-ம் ஆண்டு நெதர்லாந்தில் நடந்த தொடரில் வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது. இந்த தொடரின் இறுதியில் வெற்றி பெற்றுள்ள அவுஸ்திரேலியா, 14வது முறையாக கிண்ணத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY