சுசந்திகா ஜயசிங்க மீது தாக்குதல்: கணவர் கைது

0
93

Susanthika_CIஇலங்கையின் முன்னாள் தடகள வீராங்கணை சுசந்திகா ஜயசிங்க மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இன்று அதிகாலை இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலில் காயமடைந்த சுசந்திகா இன்று அதிகாலை கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கம்பஹாவில் அமைந்துள்ள அவரது வீட்டில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வெலிவேரிய காவல் நிலையத்தில் தாக்குதல் சம்பவம் குறித்து முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் சுசந்திகா ஜயசிங்கவின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குடும்பத் தகராறு காரணமாக இவ்வாறு தாக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

ஒலிம்பிக் போட்டித் தொடரில் 200 மீற்றர் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றுள்ள சுசந்திகா பல உள்நாட்டு வெளிநாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY