காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி (OIC)சம்மேளனம் ஊடாக விடுக்கும் முக்கிய அறிவித்தல்

0
533

Police Station Kattankudy* புனித றமழான் மாதம் ஆரம்பித்து கடந்த பத்து நாட்களில் அதிகமானவர்கள் தலைக்கவசம் இல்லாமலும் 18 வயதிற்கு குறைந்த சிறுவர்களும் மோட்டார் சைக்கிள்களை செலுத்தி வருவதனையும்,

* தினமும் விபத்துக்குள்ளாகி அதிகமானவர்களுக்கு தலையில் காயம் ஏற்பட்டு வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* குறிப்பாக 18 வயதிற்கு குறைந்த சிறுவர்களும் இளைஞர்களுமே விபத்துக்குள்ளாகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

* இவ்விடயத்தில் பெற்றோர்கள் பிள்ளைகள் மீது அதிக கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றீர்கள்.

* இன்றுமுதல் அமுலுக்கு வரும் வகையில் தலைக்கவசம் (Helmet)அணியதவர்கள் மீதும், 18 வயதுக்கு குறைந்த சிறுவர்கள் மீதும் அவர்களின் பெற்றோர்கள் மீதும் கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை பொதுமக்களுக்கு அறியத்தருகின்றேன்.

பொலிஸ் நிலையப்
பொறுப்பதிகாரி (OIC)
பொலிஸ் நிலையம்,
காத்தான்குடி.

LEAVE A REPLY