எங்கே செல்கிறது நம் சமூகம்? கோயில் கும்பாபிஷேகத்தில் முஸ்லிம்(?)கள்

0
54

muslimsஇந்தியா, விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே தம்பிபட்டி சந்தன மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் பூஜை பொருட்களுடன் முஸ்லிம்கள் பங்கேற்றனர். தம்பிபட்டி சந்தன மாரியம்மன் கோயில் கட்டப்பட்டு நேற்று முன்தினம் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

ஜமாத்தலைவர் மீராமுகைதீன், மசூதி இமாம் ஜாபர்அலி தலைமையில் முஸ்லிம்கள், பூஜைக்கு உரிய தட்டுகளுடன் கோயிலுக்கு வந்தனர். கோயில் நிர்வாகிகள் அவர்களை ஆரத்தழுவி வரவேற்றனர். முஸ்லிம்கள், யாகசாலை பந்தலுக்கு முன் அமர வைக்கப்பட்டனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இக்கோயிலுக்கு கிறிஸ்தவ, முஸ்லிம் மதத்தினரும் நன்கொடை வழங்கி உள்ளனர். ஜமாத் தலைவர் மீரா முகைதீன், ‘மத பாகுபாடு இன்றி ‘மாமா’, ‘அண்ணன்’ என்ற உறவு முறை சொல்லித் தான் இன்று வரை பழகி வருகிறோம்.

இல்ல விழாக்களில் இருமதத்தினரும் பங்கேற்க தவறுவது இல்லை. இந்த உறவு என்றும்தொடரும்,’ என்றார்.

மசூதி இமாம் ஜாபர் அலி கூறுகையில், ‘ரமழான் நோன்பு காலத் தடையை கடந்து கோயிலுக்கு வந்துள்ளோம். எங்களுக்கும், அவர்களுக்கும் உள்ள உறவு எவ்வளவு வலுவானது என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ளலாம்,’ என்றார்.

எங்கே செல்கிறது முஸ்லிம் சமூகம்?

LEAVE A REPLY