ஷார்ஜா நலன்புரி சங்கத்தால் நடமாடும் மருத்துவ பஸ் வண்டி அன்பளிப்பு

0
206

(சக்காப் சஜாத்)

13479332_1014031085313519_506113124_nசர்வதேச ஷார்ஜா நலன்புரி சங்கம் நடமாடும் மருத்துவ பஸ் வண்டி ஒன்றை இலங்கை மக்களின் சுகாதார மேம்பாட்டுக்காக நேற்று (17) அன்பளிப்பு செய்துள்ளது.

இலங்கைக்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இராட்சியத் தூதுவர் அப்துல் ஹமீத் அப்துல் பத்தாஹ் காசிம் அல்முல்லா நேற்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரகத்தில் வைத்து இந்த பஸ் வண்டியை கையளித்தார்.

இந்த நிகழ்வில் சர்வதேச ஷார்ஜா நலன்புரி சங்கத்தின் செயற் திட்ட அதிகாரி முஹம்மது ஹம்தான் அல்ஸாரி, தூதரக உயர் அதிகாரிகள், செரண்டிப் நிறுவன இயக்குனர் டாக்டர் எம்.சீ.எம். மஹீஸ் மற்றும் செரண்டிப் நிறுவனத்தின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இந்த செயற்திட்டம் நிவாரண மற்றும் அபிவிருத்திக்கான செரண்டிப் நிறுவனத்தின் ஊடாக ஒருங்கிணைக்கப்பட்டு நடாத்தப்பட்டு வருகின்றது.

13473782_1014030988646862_2082004515_n 13473883_1014031025313525_353723620_n 13474262_1014031131980181_1483207543_n 13479275_1014031051980189_1807471662_n 13479315_1014031001980194_1875072820_n

LEAVE A REPLY