(Video) நண்பர்கள் வட்டங்களுக்கு எடுத்துக்காட்டான கல்குடா நண்பர்கள் வட்டத்தின் இஃப்தார் நிகழ்வு

0
22

(அஹமட் இர்ஷாட்)

கல்குடா பிரதேசத்தில் இருக்கின்ற நண்பர்கள் வட்டத்திற்கெல்லாம் எடுத்துகாட்டாக திகழ்கின்ற கல்குடா 92/93 நண்பர்கள் வட்டத்தின் 2016ம் ஆண்டுக்கான இஃப்தார் நிகழ்வனது நேற்று (17) வெள்ளிக்கிழமை ஓட்டமாவடி பிரதேசபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

சுமார் 13 வருடங்களாக தொடர்ந் தேர்சியாக கல்குடா நண்பர்கள் வட்டத்தினால் நடாத்தப்பட்டு வரும் இஃப்தார் நிகழ்வானது இம்முறை கல்விமான்கள், நீதிபதிகள், சட்டத்தரணிகள், மருத்துவர்கள் என 500க்கும் மேற்பட்ட சமூகத்தின் பல்வேறு மட்டத்தினரும் இந்நிகழ்வில் பங்கு கொண்டனர்.

குறிப்பாக வறிய நிலைமையில் ஜீவனோபாயம் நடாத்தும்  சகோதரர்கள் பலர்  இம்முறை முன்னிலைப்படுத்தப்பட்டு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது நல்லதொரு முன்மாதிரியாகும்.

அமைப்பின் தலைவர் சனுஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சகோதரர் மௌலவி ரமழான் அவர்களினால் நற்சிந்தனை வழங்கப்பட்டதுடன் இறுதியாக பிரதித் தலைவர் ஜுனைட் நளீமியின் நன்றியுரையுடன்  நிகழ்வு இனிதே நிறைவுபெற்றது.

அது மட்டுமல்லாமல் சகல துறையினைறையும் உள்வாங்கி செயற்பட்டு வரும் குறித்த கல்குடா நண்பர்கள் வட்டமானது கல்குடா பிரதேசத்தின் அரசியல், கலாச்சார, சமூக பணிகளில் இயலுமான முறையில் தங்களினுடைய பங்களிப்பினை பிரதேசத்திற்கு ஓர் எடுத்துக்காடான முறையில் நடை முறைப்படுத்தி வருகின்றமையினை அண்மை காலங்களில் அவதானிக்க கூடிய விடயமாகவும் இருக்கின்றது.

இந்நிகழ்வு கல்குடா பிரதேசத்தில் இருக்கின்ற ஏனைய நண்பர்கள் வட்டங்களுக்கு ஓர் எடுத்துக்காட்டான முறையில் இடம் பெற்றமை குறிப்பிடதக்க விடயமாகும்.

04 IMG_20160617_180617 IMG_20160617_181226

02

LEAVE A REPLY