மொஹிதீன் அப்துல் காதரின் 111.84 மில்லியன் பெறுமதியான இரத்தினக்கற்கள் திருட்டு

0
83

140bbc5f1d3c577712bf8e9fb16239b7_L-600x330இலங்கையின் இரத்தினக்கல் வியாபாரி ஒருவருடைய 111.84 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரத்தினக்கற்கள் ஹொங்ஹொங் நாட்டில் வைத்து திருடப்பட்டுள்ளதாக சீனாவின் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 12 ஆம் திகதி இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றிருப்பதாகவும் குறித்த வியாபாரி பேருவலை பிரதேசத்தைச் சேர்ந்த முஹம்மத் ஹசான் மொஹிதீன் அப்துல் காதர்எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இவரது பயணப் பையிலிருந்தே 750 இரத்தினக் கற்களும்திருடப்பட்டுள்ளதாகவும், இதில் மிகவும் பெறுமதி வாய்ந்த நீல மாணிக்கக் கல்லும் இருந்ததாகவும் அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் இரண்டு நபர்கள் மீது ஹொங்ஹொங் பாதுகாப்பு அதிகாரிகளின் அவதானம் திரும்பியுள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தகர் அமெரிக்காவிலிருந்து இலங்கை வரும் சந்தர்ப்பத்தில் ஹொங்ஹொங்கில் இறங்கியுள்ள வேளையிலேயே இந்த திருட்டு சம்பவத்திற்கு முகங்கொடுத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY