விபத்தில் சிக்கிய எகிப்து விமானத்தின் இரண்டாவது கருப்பு பெட்டியும் கண்டெடுப்பு

0
93

An_EgyptAir_flight_heading_from_Paris_to_Cairo_has_gone_missingதலைநகரான பாரீஸ் நகரில் இருந்து எகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோவுக்கு கடந்த மாதம் 18–ந் தேதி எகிப்து ஏர் விமானம் (ஏர்பஸ் ஏ320) புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் 56 பயணிகள், 7 சிப்பந்திகள், 3 பாதுகாவலர்கள் என 66 பேர் பயணம் செய்தனர்.

கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதியில் எகிப்து வான்பிரதேசத்தில் விமானம் நுழைந்து, 37 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென ரேடாரில் இருந்து மறைந்து மாயமானது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாயமான அந்த விமானம் கடலில் விழுந்து நொறுங்கியதாக சில மணி நேரத்தில் தெரியவந்தது. அதில் பயணம் செய்த 66 பேரும் பலியாகினர்.

அந்த விமானத்தின் பாகங்களை தேடி கண்டுபிடிக்கும் பணியில் ஜான் லெத்பிரிட்ஜ் என்ற ஆழ்கடல் தேடல் கப்பல் ஈடுபட்டது. இந்த கப்பல், மாயமான விமானத்தின் முக்கிய பாகங்களை மத்திய தரைக்கடலில் கண்டு படம் எடுத்து அனுப்பியதாக செய்திகள் வெளியாகியது.

நேற்று , விமானத்தின் காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டர் சேதமடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட நிலையில், இன்று இரண்டாவது கருப்பு பெட்டி கண்டெடுக்கப்பட்டதாக தேடும் பணியில் ஈடுபட்டுள்ள குழுவினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர். விமான விபத்துக்கான காரணத்தை கண்டறிய இந்த கருப்பு பெட்டி உதவியாக இருக்கும் என நம்பப்படுகிறது.

LEAVE A REPLY