மோசமான வேலைகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை – காத்தான்குடி சம்மேளனம் எச்சரிக்கை

0
146

(எம்.ஐ.அப்துல் நஸார்)

Sammelanam Fedaration KKYமோசமான வேலைகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சம்மேளனத்தினால் 2016.06.14ஆந் திகதியிட்டு தலைவர் பொறியியலாளர் அல்ஹாஜ் ஏ.எம்.எம்.தௌபீக், அதன் செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.சபீல் நளீமி ஆகியோரின் கையொப்பத்துடன் வெளிடப்பட்டுள்ள பொதுமக்களுக்கான அறிவித்தலிலேயே இவ்வெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அவ்வறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, எமது பிரதேசத்தில் புனித ரமழான் காலத்தில் இரவு வேளைகளில் இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் வீதிகளில் நின்றுகொண்டு தறாவீஹ் தொழுகைக்காக பள்ளிவாயல்களுக்கு வருகின்ற பெண்களுக்கு இடையூறு விளைவிப்பதாகவும், இளைஞர்கள் தண்ணீர்ப் பைகளை நிரப்பி வீதியால் செல்பவர்கள் மீது வீசுவதாகவும் பல முறைப்பாடுகள் சம்மேளனத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளன.

இவ்விடயத்தினைப் பரிசீலித்த சம்மேளனம் மேற்படி பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் காத்தான்குடி பொலீஸாருடன் இணைந்து இரவு வேளைகளில் சிவில் உடையில் பொலீஸ் உத்தியோகத்தர்களை கண்காணிப்பில் ஈடுபடுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே, இதன் பிறகு இவ்வாறான மோசமான வேலைகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை மனவேதனையுடன் தெரிவித்துக்கொள்கின்றோம். அத்துடன், பிள்ளைகளின் விடயத்தில் பெற்றோர்கள் மிகக் கவனமாக இருக்குமாறும் வேண்டப்படுகின்றீர்கள் எனவும் அவ்வறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY