(Photo) தாக்குதலுக்குள்ளான ஊடகவியலாளருக்கு நீதி வேண்டி மட்டக்களப்பில் கையெழுத்துப் போராட்டம்

0
25

(விசேட நிருபர்)

f0e88e5f-ec94-4c91-a689-4d9f8381ff41தாக்குதலுக்குள்ளான ஊடகவியலாளர் பெடிகமகேவுக்கு நீதி வேண்டி மட்டக்களப்பில் இன்று (17.6.2016) கையெழுத்துப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நகரிலுள்ள காந்திப் பூங்காவுக்கு முன்னாள் இக்கையெழுத்துப் போராட்டம் இடம் பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா மற்றும் ஊடகத்துறை அமைச்சர் ஆகியோருக்கு மகஜர் ஒன்றை அனுப்பி வைப்பதற்காக இந்தக் கையெழுத்துப் போராட்டம் நடாத்தப்பட்டது.

இன்றைய இக் கையெழுத்துப் போராட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.யோகேஸ்பரன், மற்றும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கே.துரை ராஜசிங்கம், கிழக்கு மாகாண சபை பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான எம்.நடராஜா, ஞா.கிருஸ்ணப்பிள்ளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன் செல்வராசா, பி.அரியநேந்திரன், சென்ஜோன்ஸ் அம்புலன்ஸ் சேவையின் மட்டக்களப்பு மாவட்ட தலைவரும் சமூக சேவையாளருமான ஏ.எல்.மீராசாகிப் உட்பட மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியப்பிரதிநிதிகள் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் முஸ்லிம் ஊடகவியலாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது இதுவரை மரணித்த ஊடகவியலாளர்களுக்கான இரண்டு நிமிட நேர மௌனப்பிராத்தனை இடம் பெற்றதுடன் கையெழுத்துப் போராட்டம் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா மற்றும் ஊடகத்துறை அமைச்சர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கவுள்ள மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது ஊடகவியலாளர் பெடிகமகே தாக்கப்பட்டதை கண்டித்தும் ஊடகவியலாளர்களை பாதுகாக்கவும் கோருகின்றோம்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள புதிய ஆட்சியின் கீழும் ஊடகவியலாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தல்களைக் கண்டித்துள்ள தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் இது ஊடகவியலாளர்களின் கடமைக்கு பெரும் அச்சுறுத்தலாக நோக்குகின்றது.

இந் நிலையில் நீர்கொழும்பு மாநகர சபைக்குள் வைத்து ஊடகவியலாளர் பெடிகமகே கடந்த 2ம் திகதி தாக்கப்பட்டது தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த தாக்குதலுக்கு பின்னணியில் உள்ளவரை கைது செய்வதற்கான நடவடிக்கையினை இதுவரை மேற் கொள்ளவில்லையெனவும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

எனவே தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும். என்பதுடன் இனிவரும் காலங்களில் ஊடகவியலாளர்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் அச்சுறுத்தல்களை தடுக்கும் வகையிலான நடவடிக்கையினை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2a3b36ed-7472-4677-a91c-d9139b398f2a

8ce4e0b6-f0c2-4855-8ece-9c75a161148a

9e2aa1da-d66d-46ff-bffd-4f209a15974a

b92178e6-971b-401a-a9b2-31fa36ee4079

dbf9aab1-e360-4509-a19b-6d58bdb4364c

edf9a7e0-0be8-494c-b0b0-d91e01d1b978

LEAVE A REPLY