’அல்பினிசம்’ என்பது என்ன? ஒரு சிறப்பு பார்வை

0
160

Tanzania-Friendsஅல்பினிசம் என்பது ஒரு மரபணு குறைபாட்டு நோய். வெண்மைத் தோல் நோய் என்றும் சொல்லப்படுகிறது.

சரியான விழிப்புணர்வு இல்லாவிட்டால் இந்த ஆபத்தான நோய் அதிகமாக புதிய வழித்தோன்றல்களை தாக்கிவிடும்.

மரபணு காரணமாக இருப்பதால், பாதிக்கப்படுபவர்கள் எந்த விதத்திலும் பொறுப்பல்ல என்பது தான் பரிதாபம்.

நோய் வரும் விதம்

நமது உடலின் நிறத்தை தோலில் உள்ள மெலானின் நிறமி தான் தீர்மானிக்கிறது. இந்த மெலானின் நிறமி தோன்றுவதற்கு ’டைரோசினேஸ்’ செயல் அவசியமானது.

சிலருக்கு மரபணு குளறுபடி காரணமாக, இந்த டைரோசினேஸ் செயல் நடைபெறுவதில்லை. அதனால், குறைபாடுள்ள நிறமிகள் ஏற்படுகின்றன. அதுவே அல்பினிசம் என்ற இந்த வெண்மைத் தோல் நோயை உருவாக்குகிறது

நோய்க்கான அறிகுறிகள்

இவர்களுக்கு பார்வைக் குறைபாடு இருக்கும். ஒளி மீது ஒரு வெறுப்பு ஏற்படும். இவர்களுடைய தலைமுடி வெண்பொன் நிறத்தில் பார்ப்பதற்கு ஒரு வினோத தோற்றமும் பலவீனமுமாக தென்படுவார்கள்.

LEAVE A REPLY