சஹாரா பாலைவனத்தில் 34 குடியேறிகளின் சடலங்கள் மீட்பு

0
164

Saharaநைகர் நாட்டின் அல்ஜீரிய எல்லையை ஒட்டிய சஹாரா பாலைவனத்தில் 20 சிறுவர்கள் உட்பட 34 தஞ்சம்கோரிகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

சிறிய பாலைவன நகரான அஸ்ஸமக்காவுக்கு அருகில் இந்த சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக அரச அறிவிப்பொன்று குறிப்பிட்டுள்ளது.

இவர்களை அழைத்துச் சென்ற ஆட்கடத்தல்காரர்கள் கைவிட்டுச் சென்ற நிலையில் தாகத்தினால் உயிரிழந்திருப்பதாக உள்துறை அமைச்சர் பசூம் முஹமது குறிப்பிட்டுள்ளார்.

துணை சஹாரா ஆபிரிக்கா மற்றும் ஐரோப்பாவுக்கு இடையிலான குடியேறிகளின் பிரதான பாதையிலேயே நைகர் அமைந்துள்ளது. இதில் மரணித்திருக்கும் வயதுவந்தவர்களில் ஒன்பது பேர் பெண்கள் என்பதோடு ஐவர் ஆண்களாவர். கடந்த ஜுன் 6 மற்றும் 12ஆம் திகதிகளுக்கு இடையில் இவர்கள் மரணித்திருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நைகரின் வறண்ட வடக்கு அகடெஸ் பிராந்தியத்தின் ஊடே கடந்த ஆண்டில் சுமார் 12,000 பேர் கடந்து சென்றிருப்பதாக குடியேறிகளுக்கான சர்வதேச அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

அண்மைக்காலத்தில் மாலி மற்றும் நைகர் வழியாக சட்டவிரோத குடியேறிகள் அல்ஜீரியாவை அடைந்து வருகின்றனர்.

லிபியாவில் அரசியல் பதற்றம் தீவிரம் அடைந்திருப்பதால் ஆட்கடத்தல்காரர்கள் அந்த நாட்டை அதிகம் தவிர்த்து வருகின்றனர்.

#Thinakaran

LEAVE A REPLY