23 உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம் இம்மாதம் முடிவு; நீடிப்பதா? இல்லையா? ஜனாதிபதி, பிரதமருடன் பேசி முடிவு

0
139

faiser-musthafa23 உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம் இம்மாத இறுதியுடன் நிறைவடைய இருப்பதாக மாகாண சபை கள் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.

இவற்றின் பதவிக்காலத்தை நீடிப்பதா இல்லையா என ஜனாதிபதி, பிரதமருடன் பேசி முடிவு செய்ய இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர், அமைச்சர் என்ற வகையில் எனக்கு இது தொடர்பில் முடிவு எடுக்க முழு அதிகாரம் உள்ள போதும் நல்லாட்சி அரசாங்கம் என்ற வகையில் ஜனாதிபதியினதும் பிரதமரதும் கருத்துக்களை பெற இருப்பதாக கூறினார்.

#Thinakaran

LEAVE A REPLY