வெனிசுவேலாவில் உணவுத் தட்டுப்பாடு: கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் 400 பேர் வரையில் கைது

0
121

venezuela-unrestதென் அமெரிக்க நாடான வெனிசுவேலாவில் உணவுப்பொருள் தட்டுப்பாட்டின் காரணமாக பதற்ற நிலை தோன்றியுள்ளது.

அங்கு உணவுப் பற்றாக்குறை நீடிப்பதனால் கொள்ளைச் சம்பவங்கள் மற்றும் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதுடன் உணவு கோரி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக சர்வதேசத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வன்முறைகள் மற்றும் உணவுக் களஞ்சியசாலைகளில் கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் சுமார் 400ற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், ஸூயூகர் மாநிலத்தின் தலைநகரான கியூமானாவில் வெனிசுவேலா இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

வெனிசுவேலாவில் நாளாந்தம் 10 கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெறுவதாகவும் நாட்டின் 30 மில்லியன் மக்கள் மிக மோசமான பொருளாதார பின்னடைவை எதிர்நோக்கி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உலகளாவிய ரீதியில் மிகவும் மோசமான பணவீக்கத்தை வெனிசுவேலா எதிர்கொண்டுள்ளதாக கணக்காய்வுத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

வெனிசுவேலாவின் பணவீக்கம் 180 சதவீதமாகப் பதிவாகியுள்ளதுடன் மானிய முறையில் வழங்கப்படும் உணவைப் பெற்றுக்கொள்ள மணிக்கணக்காகக் காத்துக்கிடக்க வேண்டியுள்ளதாக அந்த நாட்டு மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கொலஸ் மதுரோ மற்றும் அவரது முன்னோடியான ஹ்யூகோ சாவேஸ் ஆகியோரின் செயற்பாடுகளே நாட்டின் பொருளாதாரத்தில் பின்னடைவு ஏற்படக் காரணமென அந்த நாட்டு எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

இதனால் மதுரோவை ஆட்சியிலிருந்து நீக்கும் பொதுவாக்கெடுப்பை நடத்த வெனிசுவேலாவின் எதிர்க்கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

#News1st

LEAVE A REPLY