மீன் சந்தையாக மாறிய நீதிமன்றம்

0
102

court judgementsதடை செய்யப்பட்ட தங்கூசி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 11 மீனவர்களுக்கும் தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியால் இன்று வியாழக்கிழமை (16) தீர்ப்பளித்தார்.

அத்துடன், இந்த மீனவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 384 கிலோகிராம் மீன்கள், நீதவானின் உத்தரவுக்கமைய, நீதிமன்றத்தில் வைத்து நீதவான் முன்னிலையில் ஏல விற்பனை செய்து, 64,500 ரூபாய் வருமானமும் பெறப்பட்டது.

குருநகர் பகுதியைச் சேர்ந்த 11 மீனவர்களும் 3 நாட்டு படகுகளில் தடை செய்யப்பட்ட தங்கூசி வலைகளைப் பயன்படுத்தி வேலணை கடற்பரப்பில் புதன்கிழமை (15) இரவு மீன்பிடித்துக்கொண்டிருந்த போது, கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இவர்களிடமிருந்து மீன்கள் மற்றும் 3 தொகுதி தங்கூசி வலைகளும் கைப்பற்றப்பட்டன.

கைதுசெய்யப்பட்டவர்களை நீரியல் வளத்துறை அதிகாரிகள், நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியபோது, இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட மீன்கள் நல்ல நிலையில் இருந்தமையால், நீதிவானின் முன்னிலையில் வைத்து மீன்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டன.

மேலும், தங்கூசி வலைகளை அழிப்பதற்கும் நீதவான் உத்தரவிட்டார்.

#Tamilmirror

LEAVE A REPLY