நானும் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வேன்: பா.உ. யோகேஸ்வரன்

0
146

(வாழைச்சேனை நிருபர்)

06மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடாக் கல்வி வலயத்துக்கு உட்பட்ட வாகரைக் கல்விக் கோட்டத்திலுள்ள கதிரவெளி விக்னேஸ்வரா கனிஷ்ட வித்தியாலயத்தில் நிலவும் ஆசிரியர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருமாறு கோரி அவ்வித்தியாலய மாணவர்களும் பெற்றோர்களும் நேற்று (16) வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

கல்முனை – திருகோணமலை பிரதான நெடுஞ்சாலையை வழிமறித்து கதிரவெளி விக்னேஸ்வரா கனிஷ்ட வித்தியாலயத்திற்கு முன்னால் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதுடன் காலை 07.00 மணி தொடக்கம் 09.00 மணி வரை இரண்டு மணித்தியாலங்கள் இவ் வீதியின் ஊடான போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.

இந்த வித்தியாலயத்தில் 425 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். தரம் ஓன்று தொடக்கம் தரம் ஐந்து வரையுள்ள இப்பாடசாலையில் பணிரெண்டு பகுப்புக்கள் உள்ள நிலையில் இவ் வகுப்புக்களுக்கு கற்பிப்பதற்கு அதிபருடன் சேர்த்து ஒன்பது ஆசிரியர்களே உள்ளனர். இந் நிலையில் தங்களுக்குத் தேவைப்படும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருமாறு கோரியே இவ் ஆர்ப்பாட்டம் இடம் பெற்றிருந்தது.

ஆர்ப்பாட்ட இடத்துக்கு வருகைதந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.யோகேஸ்வரன் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபானியுடன் தொலைபேசியில் உரையாடி ஒரு வாரத்திற்குள் இரண்டு ஆசிரியர்களை நியமிப்பதாக கொடுத்த வாக்குறுதியையடுத்து ஆர்ப்பாட்டக் காரர்கள் வீதியை விட்டு வாகன போக்குவரத்திற்கு இடமளித்து கலைந்து சென்றதுடன் பாடசாலை தேவைகள் அடங்கிய மகஜர் ஒன்றினையும் பாராளுமன்ற உறுப்பினரிடம் கையளித்தனர்.

ஒரு வாரத்திற்குள் குறித்த பாடசாலைக்கு இரண்டு ஆசிரியர்கள் நியமிக்கப்படாதவிடத்து தங்களது ஆர்ப்பாட்டம் தொடரும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.யோகேஸ்வரனிடம் தெரிவித்த போது, அவ்வாறு நடக்காது; அவ்வாறு உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் தானும் உரிய அரசியல்வாதி மற்றும் அதிகாரிகளுக்கெதிராக அவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வேன் என்று ஆர்ப்பாட்டக் காரர்களிடம் தெரிவித்தார்.

01 03 04 07 08

LEAVE A REPLY