மத குருக்கள் கடமைகளைச் சரியாகச் செய்தால் நாட்டில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பிருக்காது: பி.ச.உறுப்பினர் முனாஸ்

0
174

(சப்னி)

6fc89661-be86-4061-bb36-750e6f68a5e5இன்று நாட்டில் இனமுறன்பாடுகள் ஏற்படுவதும் அதனால் அரசாங்கத்தை மக்கள் குற்றம் சாட்டி பல திசைகளில் பிரச்சனைகளை ஏற்படுத்துவதற்கான காரணம் நாட்டில் இருக்கும் மத குருக்கள் தங்களின் பணிகளை சரியாக செய்யாமையே காரணம் என அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும் அம்பாறை மாவட்ட பொதுப் பணிகள் அமைப்பின் தலைவருவமான எஸ்.எல்.முனாஸ் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்ட பொதுப் பணிகள் அமைப்பின் 2016 ஆம் ஆண்டுக்கான ஒன்று கூடல் நேற்று  (15) அட்டாளைச்சேனை 10 ஆம் பிரிவிலுள்ள அமைப்பின் காரியாலத்தில் இடம்பெற்ற கூட்டத்தின்போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

தன் சமூகத்தில் இருக்கும் மக்களுக்கான விழிப்பூட்டல்கள் நடைமுறைகளை சரியாக எத்திவைக்காத குறை இருந்து கொண்டிருக்கும் போது முந்திச்சென்று மாற்று மதத்தினரைச்சாட நினைப்பதும், அவர்களில் மதஸ்தலைங்களைக் கட்ட விடாமல் தடுப்பதும், ஆர்ப்பட்டங்கள் என்ற பெயரில் இனவாத கேவலமான வார்த்தைப் பிரயோகம் செய்வதும் எந்த வகையில் ஏற்றுக்கொள்ள முடியும்.

அவற்றை பார்க்கவும் முறைப்பாடுகளுக்கான விசாரணை நடாத்தவும் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு முறைமையை அரசு நியமித்திருக்கின்ற இவேளையில் சில மத குருக்கள் இனவாதமாக நீதி வழங்கள் எவ்வகையில் நியாயமாகும்.

இலங்கை நாட்டில் சகல இன மக்களுக்கும் தங்களின் மதக்கடமைகளைச் செய்வதற்கு பூரண சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கும் போது குறுகிய இனவாத சிந்தனை கொண்ட சில மத குருக்கள் இன்று இனங்களைக் கூட்டி விடுவதும் அதனால் பாரிய பிரச்சனைகளைத் தோற்றுவிக்கவும் மும்முறமாகத் திட்டம் தீட்டுகின்றனர்.

இலங்கை அரசு உடனடியாக இப்படியான கொடூர மனதுடன் செயல் படும் மத குருக்களை அவர்கள் போராட்டம் மூலமான இனவாதக் கருத்துகளுக்கு இடமளிக்காது இப்படியான முறையில் இனங்களைச் சாடி பிரச்சனை உண்டுபன்னும் மத குருக்களுக்கு அவர்களின் பட்டத்தைக் களைந்து விட்டால் அவர்களைப் பார்த்து மற்றவர்கள் திருந்த சந்தர்ப்பம் இருக்கிறது.

எனவே நாட்டில் இனவாதத்தைத் தூண்டும் நபர்கள் யாராக இருந்தாலும் எந்த மதத்தினைச் சார்ந்தவராக இருந்தாலும் எந்தப்பதவியில் இருந்தாலும் அரசு அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும்.

எனவே நாட்டில் முஸ்லிம்கள் அவர்களின் வாழ்விடங்களில் பள்ளிவாயல்கள் கட்டக்கூடாது அல்லது இந்துக்கள் அவர்களின் வாழ்விடங்களில் கோவில்கள் அமைக்கக்கூடாது என்ற சில்லறைத்தனமான சிலரின் கருத்துக்களினால் இன்று பெரும் பேராபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. உதாரணம் நாட்டில் கடந்த வருடங்களில் எய்து விடப்பட்ட ஒரு இனவாத இயக்கத்தின் தாக்கம் ஒரு மிகவும் வலுவான அரசைக் கவிழ்த்துள்ள வரலாற்றினை நினைத்துப் பார்க்கவும் முடியாத ஒரு பெரும் மாற்றத்தை இன்றைய அரசும் கடுமையாகவும் கண்டிப்பாகவும் எண்ணிப்பார்க்க வேண்டும்.

மத குருக்கள் அவர்களுக்கான கடமைகளுடன் இருந்து விட்டால் இன்று நாட்டில் எந்தப் பிரச்சனையும் வருவதற்கு வாய்ப்பிருக்காது. மதகுருக்கள் அரசியலில் ஈடுபடவும் சந்தப்பம் வழங்கக் கூடாது. கண்ணியமாக நாமனைவரும் மதிக்கும் ஒரு மதகுரு அரசியலுக்குள் நுளைந்து தான் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக பல மோசமான நடவடிக்கைகளையெல்ல்லாம் செய்கின்றபோது ஏனைய மதகுருக்களுக்களுக்கு மக்கள் கொடுக்கும் மதிப்பும் மரியாதையும் கேள்விக் குறியாகிவிடுகிறது. அதனால் சகல மத குருக்களையும் மக்கள் ஒரே பார்வையில் பார்க்க விளைகின்றனர்.

எனவே இலங்கை அரசு மதகுருக்களுக்கு அரசியலில் குதிக்க முடியாது எனும் சட்டத்தை நிறை வேற்றவேண்டும் என்பதனை கூறிவைக்க விரும்புகிறேன்.

நாட்டில் சட்டத்திற்காக நீதிமன்றங்கள், உயர் நீதிமன்றம் என்று இருக்கின்றன, பாதுகாப்புக்காக பொலிஸ், இராணுவம், மற்றும் முப்படைகளும் இருக்கின்றபோது மதகுருக்கள் சகல அதிகாரங்களையும் கையிலெடுத்து அவர்களே நீதிபதிகளாகவும், இராணுவமாகவும் நடந்து கொள்ளும் விதம் மக்களுக்கு அரசுடன் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

ஆகவே இன்று நாட்டில் இருக்கும் நல்லாட்சி அரசு மதகுருக்களுக்கு கட்டாயச் சட்டத்தினை இயற்ற வேண்டும். அவர்களின் கடமையை மீறி ஏனைய விடையங்களில் தேவையில்லாமல் மூக்கினை நுளைப்பதனைத் தடுக்க வேண்டும். நாட்டில் சமாதானம் என்பது மக்களின் மனங்களிலும் அவர்களின் சூழலிலும் மக்கள் மத்தியிலும் இருக்கவேண்டுமே தவிர எழுத்தளவிலும் பேச்சுவடிவிலும் சமாதானம் இருந்து எந்தப் பிரயோசனமும் இல்லை என்பதனையும் ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

ஆகவே இலங்கைத் திருநாட்டில் பல தசாப்த யுத்தம் முடிவுற்று இன்று சந்தோஷமாக மக்கள் வாழ ஆரம்பிக்கும் போது மீண்டுமொரு பயங்கரமான நிலைமை உருவாக எள்ளளவேனும் இடமளிக்கக் கூடாது. என்பதனைக் கருத்தில் கொண்டு இந்த நல்லாட்சி அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனதுரையில் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY