எனக்கு ‘முஜிபுர் ரஹ்மான்’ என்ற பெயரை சூட்­டி­ய­வர் அல­வி மௌலா­னா: பாரா­ளு­ம­ன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்­மான்

0
431

Mujeebur Rahmanஅஷ்­ஷெய்யத் அலவி மௌலானாதான் எனக்கு ‘முஜிபுர் ரஹ்மான்’ என்ற நாமத்தை சூட்­டினார். முஹம்மத் முஹீன் என்ற எனது இயற் பெயரை அவரே மாற்றி முஜிபுர் ரஹ்மானாக்கினார் என கொழும்பு மாவட்ட பாராளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் தெரி­வித்­துள்ளார்.

அலவி மௌலா­னா­வின் மறை­வை­யொட்டி முஜிபுர் ரஹ்மான் எம்.பி. விடுத்­துள்ள அனு­தாபச் செய்­தி­யி­லேயே இவ்­வாறு குறிப்­பி­ட்டுள்­ளார்.

அதில் மேலும் குறி­ப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது, தொழிற்­சங்­க­வா­தி­­யான அஷ்­ஷெய்­யது அலவி மௌலானா தொழி­லாளர் வர்க்­கத்தின் உரி­மை­க­ளுக்­காக வீதியில் இறங்கிப் போரா­டி­யவர் ஆவார். அவரின் போராட்ட அர­சி­யலால் கவ­ரப்­பட்டு 1990 களில் அவ­ருடன் இணைந்து செயலாற்­றினேன். இதன்­போதே அவர் என்னை முஜிபுர் ரஹ்மான் என்று அழைப்பார். அவரால்தான் முஹீன் ரஹ்மான் என்­கிற என பெயர் முஜி­புர் ரஹ்மானாக மாற்றிக்கொண்டேன்.

அஷ்­ஷெய்­யது அலவி மௌலானா ஈராக்கில் அமெ­ரிக்­காவின் தாக்­கு­த­ல்­களை கண்­டித்து பல ஆர்ப்­பா­ட்­டங்­களை முன்­னின்று நடத்­தி­யுள்ளார். அத்­துடன் பலஸ்­தீ­னுக்கு எதி­ராக இஸ்­ரே­லினால் மேற்­கொ­ள்­ளப்­பட்ட கொடூரத் தாக்­கு­தல்­க­ளையும் வன்­மை­யாக கண்­டித்தார்.

அஷ்­ஷெய்­யத் அலவி மௌலா­னா­வின் இழப்பு முஸ்லிம் சமூ­கத்­திற்­கு மாத்­தி­ர­மல்­லாது தொழிற்­சங்க வாதி­க­ளுக்கும் தொழி­லாளர் வர்க்­கத்­தி­ன­ருக்கும் போராட்ட குண­மு­டைய அர­சி­யல்­வா­தி­க­­ளுக்கும் பேரி­ழப்­பாகும் என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

LEAVE A REPLY