காத்தான்குடி கடற்கரைப் பகுதியில் எச்சரிக்கை அறிவிப்பு பலகைகள்

0
279

(விஷேட நிருபர்)

imageகாத்தான்குடி கடலில் நீராடுவது தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்து காத்தான்குடி கடற்கரைப் பகுதியில் எச்சரிக்கை அறிவிப்பு பலகைகள் இன்று(16.6.2016) போடப்பட்டன.

காத்தான்குடி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் இந்த எச்சரிக்கை அறிவிப்பு பலகைகளை போடுமாறு கேட்டுக் கொண்டதற்கிணங்க, பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைவாக இந்த எச்சரிக்கை அறிவிப்பு பலகைகள் போடப்பட்டன.

image

காத்தான்குடி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முசம்மில்லின் ஆலோசனையில் கரையோரம் பேணல் மற்றும் கரையோர வளமுகாமைத்துவ திணைக்களத்தினால் இந்த அறிவிப்பு பலகைகள் போடப்பட்டுள்ளன.

எச்சரிக்கை, ஆழமான கடற் பகுதி, கடலில் நீராடல் தவிர்க்கப்பட்டுள்ளது என தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் எச்சரிக்கை அறிவிப்பு பலகையில் எழுதப்பட்டுள்ளன.

இந்த எச்சரிக்கை பலகைகள் காத்தான்குடி கடற்கரையில் டெலிகொம் சந்தி, மற்றும் கடற்கரை வீதி சந்தி, மற்றும் நதியாக் கடற்கரை சந்தி ஆகிய இடங்களில் போட்டப்பட்டுள்ளதாக கரையோரம் பேணல் மற்றும் கரையோர வளமுகாமைத்துவ திணைக்களத்தின் காத்தான்குடி பிரதேச செயலக திட்ட உத்தியோகத்தர் ஜப்ரியல் மிக்கேல் தெரிவித்தார்.

LEAVE A REPLY