முஹம்மட் முஸம்மில் பொலிஸ் நிதி குற்ற விசாரணை பிரிவில் ஆஜர்

0
187

mohammed-muzammilதேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் முஹம்மட் முஸம்மில் இன்று முற்பகல் பொலிஸ் நிதி குற்ற விசாரணை பிரிவில் இன்று ஆஜராகி உள்ளார்.

பொலிஸாரின் அறிவித்தலுக்கு அமைய அவர் அங்கு ஆஜராகி உள்ளார்.

கடந்த அரசாங்கத்தில் அரச பொறியிலாலளர் கூட்டுத்தாபனத்தின் வாகனங்களை முறையற்ற ரீதியில் பயன்படுத்தியமை தொடர்பில் வாக்கு மூலம் பதிவு செய்வதற்கு அவர் அழைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

பொலிஸ் நிதி குற்ற விசாரணை பிரிவினரிடம் ஆஜராகியுள்ள முசம்மிலிடம் தற்போது வாக்குமூலம் பதிவு செய்யப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

-NF-

LEAVE A REPLY