கம்மன்பில பொலிஸ் சிறப்பு விசாரணை பிரிவில் ஆஜர்

0
130

Udaya-Gammanpilaபிவிதுரு ஹெல உறுமயவின் பொது செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய உதய கம்மன்பில இன்று காலை பொலிஸ் சிறப்பு விசாரணை பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.

போலி அட்டர்னி அனுமதி பத்திரத்தின் ஊடாக அவுஸ்திரேலிய நிறுவனம் ஒன்றின் பங்குகளை விற்பனை செய்த சம்பவம் தொடர்பான முறைப்பாட்டுக்கு அமைய வாக்குமூலம் பெற்று கொடுக்கவே அவர் முன்னிலையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேற்று காலை பொலிஸ் சிறப்பு விசாரணை பிரிவில் முன்னிலையாகயிருந்த போதும் சுகயீனம் காரணமாக முன்னிலையாக முடியாமல் போனமை சுட்டிக்காட்டத்தக்கது.

1997 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதத்தில் பெற்று கொடுத்த அட்டர்னி அனுமதி பத்திரம் போலியானது எனக் கோரி, குறித்த அவுஸ்திரேலிய நிறுவனத்தின் பங்கு உரிமையாளர் இந்த முறைப்பாட்டை கடந்த 2015 ஆம் ஆண்டு மேற்கொண்டார்.

-ET-

LEAVE A REPLY