ஓய்வு பற்றி அறிவிப்பார் மிஸ்பாஹுல் ஹக்

0
12

imageபாகிஸ்தான் அணியின் டெஸ்ட் கேப்டன் மிஸ்பா-உல்-ஹக்(வயது 42). நீண்டகாலம் கேப்டனாக பணியாற்றிய அவர் ஓய்வு பெறும் எண்ணத்தை கைவிட்டு அணியை தொடர்ந்து வழிநடத்த வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தியது. அதன்படி தற்போதைய இங்கிலாந்து சுற்றுப்பயணத்திலும் அவர் அணியை வழிநடத்த உள்ளார்.

பாகிஸ்தான் அணி அடுத்த மாதம் ஜூலை 14-ந்தேதி முதல் செப்டம்பர் 7-ந்தேதி வரை இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த அணிக்கெதிராக நான்கு டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது.

இதற்காக இங்கிலாந்துக்கு புறப்படும் முன் மிஸ்பா தனது எதிர்கால திட்டம் குறித்த தெளிவான அறிவிப்பை வெளியிட விரும்புவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். அதன்படி நாளை நடைபெற உள்ள பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது, அவர் ஓய்வு முடிவை வெளியிடலாம் அல்லது கிரிக்கெட் வாரியத்திடம் தனது முடிவை தெரிவிக்கலாம் என்றும் அவர் கூறினார்.

எனவே, மிஸ்பா இங்கிலாந்து சுற்றுப் பயணத்தோடு சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவார் என தெரிகிறது.. ஏற்கனவே அவர் 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார்.

LEAVE A REPLY