ஜப்பானின் ஹொக்காய்டோ தீவில் லேசான நிலநடுக்கம்

0
93

imageஜப்பான் நாட்டின் வடக்குப்பகுதியில் உள்ள முக்கியமான தீவான ஹொக்காய்டோவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் அது 5.3 அலகாக பதிவாகியுள்ளது.

பெரிய அளவிலான பாதிப்புகள் மற்றும் காயங்கள் குறித்த எந்த அறிவிப்பும் உடனடியாக வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள பகுதியில் உள்ள அணுசக்தி ஆலைகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் நாட்டில் நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கமான ஒன்றுதான். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தெற்குப்பகுதியில் உள்ள கைஷூ தீவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 49 பேர் பலியானார்கள். அதன் பிறகு தற்போது தான் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY