பிற­ருக்கு இடையூறின்றி இபாதத் செய்க: ஜம்­இய்­யதுல் உலமா வேண்டுகோள்

0
287

ACJU Logo newபுனித ரமழான் மாதத்தில் பிற­ருக்கு இடை­யூறு ஏற்­ப­டுத்­து­வதை தவிர்க்கும் வித­மாக தமது இபா­தத்­து­களை அமைத்­துக்­கொள்­ளு­மாறு அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா வேண்­டுகோள் விடுத்­துள்­ளது.

நாட்டின் சில பிர­தே­சங்­களில் பள்­ளி­வா­சல்­களில் அதிக சப்­தத்­துடன் ஒலி­பெ­ருக்கி பயன்­ப­டுத்­து­வது பிற மதத்­த­வர்­க­ளுக்கு இடை­யூ­றாக அமை­வ­தாக அ. இ. ஜ. உல­மா­விற்கு முறைப்­பா­டு வழங்­கப்­பட்­டி­ருக்கும் நிலை­யி­ல் வெளி­யி­டப்­பட்­டுள்ள அறிக்­கையில் மேற்­கண்­ட­வாறு வேண்­டுகோள் விடுக்கப்­பட்­டுள்­ளது.

உலமா சபையின் பொதுச் செய­லாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ முபா­ரக் (மதனி) யினால் வெளியி­டப்­பட்ட அறிக்­கையில் மேலும்
தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

புனித ரம­ழானின் முதல் பத்தைக் கழித்துக் கொண்­டி­ருக்கும் நாம் நோன்பின் மகத்­துவம் பேணி நடந்து கொள்ள வேண்டும். மற்­ற­வர்­களை தொந்­த­ரவு செய்யும் வண்ணம் எமது அமல்கள் அமைந்து விடக்­கூ­டாது.

ரம­ழானை நாம் எவ்­வாறு கழிக்க வேண்டும் என்­பது பற்­றிய வழி­காட்­டல்­களை அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா ஏற்­க­னவே வெளி­யிட்­டுள்­ளது.

இருந்­த­போ­திலும் பல இடங்­களில் முஸ்­லிம்கள் இரவு நேரங்­களில் ஒலி­பெ­ருக்­கியைப் பாவிப்­ப­தனால் ஏற்­படும் இடை­யூ­றுகள் பற்­றிய முறைப்­பா­டுகள் வந்த வண்­ண­முள்­ளன. நமது இபா­தத்­துக்கள் மூலம் பிறர் துன்­பு­றுத்­தப்­படக் கூடாது என்­பது பொது­வி­தி­யாகும்.

சில ஊர்­களில் தராவீஹ், பயான், திக்ர் மற்றும் ஓதல்கள் என்­பன ஒலி­பெ­ருக்­கியைப் பயன்­ப­டுத்தி பிற­ருக்கு இடை­யூறு ஏற்­படும் வகையில் செய்­யப்­ப­டு­வ­தா­னது மோச­மான பின் விளை­வு­களை ஏற்­ப­டுத்­தக்­கூடும். பிரச்­சினை வந்த பின் உரிமைக் குரல் எழுப்­பு­வது எந்தப் பய­னையும் தராது. நோயா­ளிகள், குழந்­தைகள், தொழி­லுக்குச் செல்வோர் போன்­றோரும் அயலில் வாழும் பிற சமய சகோ­த­ரர்­களும் நித்­தி­ரை­யி­லி­ருக்கும் வேளை இவ்­வாறு நடந்து கொள்­வது தவ­றா­ன­தாகும். இதை கண்­டிப்­பாக தவிர்­ந்து கொள்ள வேண்டும்.

அண்மைக் கால­மாக முஸ்­லிம்கள் மீது பிற சம­யத்­த­வர்கள் வெறுப்­பு­ணர்­வோடு நடந்து கொள்ள நமது பிழை­யான நட­வ­டிக்­கை­களும் காரணம் என்­பதை மறுக்க முடி­யாது.

எமது மூதா­தையர் விரும்­பிய இடங்­க­ளி­லெல்லாம் பள்­ளி­வா­சல்­களை நிர்­மா­ணித்­தார்கள். தமது சன்­மார்க்க கட­மை­களை அழ­காக செய்­து­கொண்­டார்கள்.

அண்மைக் கால­மாக ஏன் நம்­மீது வெறுப்­பு­ணர்­வோடு பிற சமய சகோ­த­ரர்கள் நடந்து கொள்­கி­றார்கள் என்று நாம் சிந்­தித்து செயற்­பட வேண்டும்.

“உங்­களில் அநி­யாயம் செய்­தோரை மாத்­திரம் பீடிக்­காத சோத­னையை நீங்கள் அஞ்சிக் கொள்­ளுங்கள். நிச்­ச­ய­மாக அல்லாஹ் தண்­டிப்­பதில் கடு­மை­யா­னவன் என்­ப­தையும் அறிந்து கொள்­ளுங்கள்.” (8/25) என்ற அல்­லாஹு தஆ­லாவின் எச்­ச­ரிக்கை பொது­வா­ன­தாகும்.

எனவே சகல பள்ளி நிர்­வா­கங்­களும் இயக்­கங்­களும் தத்­த­மது பிழை­யான செயல்­பா­டு­களால் மற்றோர் சினம் கொள்ளத் தூண்டும் விதமாக நடந்து கொள்ள வேண்டாம் எனவும் தராவீஹ், பயான், திக்ர் முதலியவற்றுக்கு ஒலிபெருக்கிகளை பயன்படுத்தி ஏனையோருக்கு இடையூறு ஏற்படுத்துவதை கண்டிப்பாகத் தவிர்ந்து கொள்ளும் படியும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

#Vidivelli

LEAVE A REPLY