(Photo) கைவிடப்பட்ட பழைய இராணுவ முகாமில் தீ: மட்டக்களப்பில் சம்பவம்

0
9

(அப்துல்லாஹ்)

மட்டக்களப்பு மாவடிவேம்பில் இராணுவத்தினரால் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட இராணுவ முகாமில் புதன்கிழமை மாலை (ஜுன் 15, 2016) திடீரென ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அப்பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

மட்டக்களப்பு மாவடிவேம்பில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இராணுவத்தினரால் இந்த முகாம் கைவிடப்பட்டிருந்தது.

3d06e6a0-1841-4970-b5b3-d9a4f3bb2a79புதனன்று ஏற்பட்ட தீ விபத்து காரணமாக இராணுவத்தினரால் முன்னர் புதைக்கப்பட்டிருந்த நிலக்கண்ணிவெடிகள் வெடித்ததாகவும், முகாமை சுற்றி பலத்த சத்தத்துடன் பெரும் புகைமூட்டம் காணப்பட்டதாகவும், அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து தடைப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் தெரிவித்தன.

இதே நேரம் இந்த சம்பவம் பற்றி ஏறாவூர் பொலிஸாரிடம் வினவிய போது, இது குறித்து தங்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.

தீ விபத்து குறித்து அருகில் உள்ள பொதுமக்கள் கருத்து தெரிவிக்கையில், இராணுவத்தினரால் கைவிடப்பட்ட இந்த இராணுவ முகாமில் இன்னும் பல நிலக்கண்ணிவெடிகள் காணப்படுகின்றன. பல வருடங்கள் ஆகியும் இதனை இராணுவத்தினர் அகற்றாது இந்தப் பிரதேசத்தை ஆபத்தான பகுதியாக பிரகடனப்படுத்தி அடைத்து வைத்திருந்தனர்.

இன்னிலையில் அடைக்கப்பட்டிருந்த அந்த இராணுவமுகாமிற்கு பின்புறம் திடீரென தீபிடித்து எரியத்தொடங்கியதுடன், தீ பிரதான பாதையை நோக்கி பரவத்தொடங்கியதால் இராணுவ முகாமிற்குள் புதைக்கப்பட்டிருந்த குண்டுகள் வெடிக்கத்துடங்கியது. சுமார் 15 தடவைக்கு மேல் குண்டுச்சத்தங்கள் வெடித்ததை அவதானிக்க கூடியதாக இருந்ததுடன், வீதி முழுவதும் பெரும் புகைமூட்டம் காணப்பட்டது. இதனால் சிறிதுநேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டதோடு போக்குவரத்தும் பாதிக்கப்பட்டிருந்தது.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த இராணுவத்தினர் தண்ணீர் தாங்கி மற்றும் இராணுவ சிப்பாய்களின் உதவிகளை கொண்டு தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர் எனத் தெரிவித்தனர். இந்தப் பிரதேசம் தொடர்ந்தும் ஆபத்தான பகுதியாக காணப்படுவதனால் தாம் எந்நேரமும் அச்சத்துடன் வாழ்வதாகவும் தெரிவித்தனர்.

3d06e6a0-1841-4970-b5b3-d9a4f3bb2a79

5e44b8f3-5b55-43a9-a6fc-6def6d632402

08a8ff33-c2ba-4665-b6af-1f124a4046a8

846e5591-c9a1-4c3c-adb9-9e0dfdf6107a

ce071de6-34eb-48bb-b159-3f0780bccbad

ecf2aa1f-df65-4f39-b5cc-68b194ab8435

LEAVE A REPLY