யாரெல்லாம் இரத்த தானம் செய்யலாம்? கிடைக்கும் நன்மைகள்

0
83

201606161028147055_Who-can-donate-blood-its-benefits_SECVPFமனிதனின் உடலில் சுமார் 5-6 லிட்டர் இரத்தம் இருக்கும். இரத்த தானம் செய்வோர் ஒரே நேரத்தில் 300 மிலி இரத்தம் வரை தானம் செய்ய முடியும். இப்படி தானம் செய்யப்படும் இரத்தமானது 2 வாரங்களில் நம் உடலில் உண்ணும் உணவுகளால் உற்பத்தி செய்யப்பட்டுவிடும்.

இரத்த தானம் செய்வது என்பது, உடலில் புதிய இரத்தத்தின் அளவை அதிகரிப்பதற்கு சமம். எனவே உங்களுக்கு புதிய இரத்த செல்கள் வேண்டுமானல், இரத்த தானத்தை செய்து வாருங்கள்.

சமீபத்திய ஆய்வுகளில் தொடர்ச்சியாக இரத்த தானம் செய்து வருவோருக்கு மாரடைப்பு வரும் வாய்ப்பு குறைவதாக தெரிய வந்துள்ளது. ஆகவே மாரடைப்பு ஏற்படாமல் இருக்க வேண்டுமானால் இரத்த தானம் செய்யுங்கள்.

உடலில் இரும்புச்சத்தின் அளவு அதிகமாகும் போது, கல்லீரல் செயலிழப்பு மற்றும் கணைய பாதிப்பு போன்றவை ஏற்படும். ஆனால் இரத்த தானத்தை ஒருவர் செய்து வரும் போது, உடலில் உள்ள அதிகப்படியான இரும்புச்சத்து வெளியேற்றப்பட்டு, கல்லீரல் மற்றும் கணைய பாதிப்பு ஏற்படுவது குறையும்.

அடிக்கடி இரத்த தானம் செய்து வந்தால், உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்குமாயின், பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு குறையும்.

இரத்த தானம் செய்வதால், உடலில் இரத்த அழுத்தம் சீராக பராமரிக்கப்படும். இதனால் பல்வேறு நோய்கள் தாக்கும் அபாயமும் குறையும்.

இரத்த தானம் செய்யும் செய்யும் போது, மனதில் மற்றவருக்கு உதவிய சந்தோஷம் மற்றும் திருப்தி கிடைத்து, மனதில் ஒருவித மகிழ்ச்சியுடன் இருக்கக்கூடும்.

இரத்த தானம் செய்வோரின் எடை 50 கிலோவிற்கு குறையாமல் இருக்க வேண்டும். இரத்த தானம் செய்வோர் 18 வயது நிரம்பியராகவும், 60 வயதிற்குட்பட்டவராகவும் இருக்க வேண்டும். எந்த ஒரு நோய்த்தொற்றும் இல்லாதவராக இருக்க வேண்டும். இரத்த ஹீமோகுளோபின் அளவு 12 கிராமிற்கு குறையாமலும், 16 கிராமிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

ஒரு ஆண் மூன்று மாதத்திற்கு ஒருமுறை இரத்த தானம் செய்யலாம். அதேப் போல் ஒரு பெண் 4 மாதங்களுக்கு ஒருமுறை இரத்த தானம் செய்யலாம்.

LEAVE A REPLY