ஐரோப்பிய கால்பந்து: அல்பேனியாவை வீழ்த்தி பிரான்ஸ் 2-வது சுற்றுக்கு தகுதி

0
214

201606161202545524_France-beat-Albania-20-to-reach-second-round-of-the-Euros_SECVPF15-வது ஐரோப்பிய (யூரோ) கோப்பை கால்பந்து போட்டி பிரான்சில் நடைபெற்று வருகிறது. ‘ஏ’ பிரிவில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் பிரான்ஸ்- அல்பேனியா அணிகள் மோதின.

இதில் பிரான்ஸ் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த 2 கோல்களுமே ஆட்டம் முடியும் தருவாயில் தான் விழுந்தன. 90-வது நிமிடத்தில் அனடோனி கிரைஸ்மேன் முதல் கோலை அடித்தர். 96-வது நிமிடத்தில் டிமிட்ரிபேயட் 2-வது கோலை அடித்தார். கடைசி நிமிடங்களில் விழுந்த இந்த கோலால் அல்பேனியா அணி வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது பிரான்ஸ் அணி பெற்ற 2-வது வெற்றியாகும். இதன்மூலம் அந்த அணி ‘நாக்அவுட்’ சுற்றான 2-வது ரவுண்டுக்கு தகுதி பெற்றது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் 2-1 என்ற கணக்கில் ருமேனியாவை வீழ்த்தி இருந்தது. பிரான்ஸ் கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் சுவிட்சர்லாந்தை சந்திக்கிறது.

அல்பேனியா 2-வது தோல்வியை தழுவியது. அந்த அணி போட்டியில் இருந்து வெளியேற்றப்படும் நிலையில் இருக்கிறது.

இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் ருமேனியா-சுவிட்சர்லாந்து அணிகள் மோதின. இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் ‘டிரா’ ஆனது.

ஆட்டத்தின் 18-வது நிமிடத்தில் ருமேனியா முதல் கோலை அடித்தது. ஸ்டான்சு இந்த கோலை அடித்தார். 57-வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து வீரர் மெக்மெதி பதில் கோல் அடித்து சமன் செய்தார்.

‘பி’ பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் ரஷியா- சுலோவாக்கியா அணிகள் மோதின. இதில் சுலோவாக் கியா 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

இன்று நடைபெறும் ஆட்டங்களில் இங்கிலாந்து- வேல்ஸ் (‘பி’ பிரிவு), உக்ரைன்- வடக்கு அயர்லாந்து, ஜெர்மனி- போலந்து (‘சி’பிரிவு) அணிகள் மோதுகின்றன.

LEAVE A REPLY