(Photos) கதிஜா பவுண்டேசன் தலைவருக்கு உள்ள உணர்வு ஏன் நமது பௌத்த சமூகத்தில் யாராவது ஒருவருக்காவது இதுவரை வரவில்லை?

0
35

(அஷ்ரப் ஏ. சமத்)

2abdeதனது நாட்டுப்பற்றின் காரணமாக ‘தெற்காசியாவின் சிறந்ததொரு புற்று நோய் வைத்தியசாலையாக மகரகம வைத்தியசாலை மாறல் வேண்டும்’ என்று இந்த கதிஜா பவுண்டேசன் தலைவர் முஹமட் காணும் கனவு ஏன் நமது பௌத்த சமூகத்தில் யாராவது ஒருவருக்காவது இதுவரை வரவில்லை? என களனி பல்கலைக்கழக விரிவுரையாளர் அமில தேரோ அங்கு ஊடகவியலாளர் மத்தியில் கேள்வி எழுப்பினார்.

ஆனால் முஹம்மதின் நல்ல நோக்கம் அவர் எடுத்த முயற்சி வெற்றியளித்துள்ளது. அவர் தனது மகன் புற்று நோயால் பாதிக்கப்பட்டதற்காக இந்த முயற்சியை எடுக்கவில்லை. இந்த நாட்டில் வாழும் 70 ஆயிரம் மக்கள் இந்த நிதிக்காக 100 ரூபா, 50 ரூபாவாக சேர்த்துள்ளார்.

இந்த திட்டத்தினை ஆரம்பித்தவருக்கே இந்த பெருமை போய்ச் சேர வேண்டும்.

2adeஇந்த நாட்டில் வாழும் மக்கள் மிக்க நல்லவர்கள் இந்த முஹமட்டை, ஒரு முஸ்லீம் என்ற உணர்வுடன் அவர்கள் இன ரீதியாக பார்க்கவில்லை. அவர் இந்த நாட்டில் உள்ள புற்றுநோயாளர்களுக்காக ஒரு சிறந்த நல்ல கைங்கரியத்தினை முன்னெடுத்துள்ளார். ஆவர் பெட் இயந்திரமொன்றை மகரகம புற்று நோய் வைத்தியசாலைக்கு பெற்றுத்தர எடுத்த முயற்சியை மக்கள் ஏற்றுள்ளார்கள்.

20 கோடி தேவைப்பட்டது. ஆனால் மக்கள் இன்னும் 3 கோடி ரூபாவை நேற்றும் இன்றும் வங்கியில் இட்டுள்ளார்கள். இந்த திட்டம் நல்ல நோக்கம் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மொஹமட்டின் எண்ணக்கருவில் நல்ல சிந்தனையில் இது ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான நல்லமுயற்சிகளை தர்கா நகரை தாக்கியவர்களால் இன்னும் ஏன் உணரமுடியவில்லை’ என களனி பல்கலைக்கழக விரிவுரையாளர் அமில தேரோ ஊடகவியலாளர் மத்தியில் தெரிவித்தார்.

2abdeghநேற்று (15) கதிஜா பவுண்டேசன் தலைவர் முஹம்மத் புற்று நோய் வைத்தியசாலைக்கு 20 கோடி ரூபா செலவில் பெட் மெசின் இயந்திரமொன்றை கொள்முதல் செய்வதற்காக பொதுமக்களும் ஊடகங்களும் எடுத்த முயற்சிக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக ஊடக மாநாடொன்றை கொழும்பு கலாதாரி ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்தார்.

இந் நிகழ்வில் மகரகம வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் வில்பட் மற்றும் இத்திட்டத்தில் பங்கெடுத்த குழு, ஊடகவியலாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்த நாடு நல்ல நாடு நல்ல மக்கள் உலகில் சிறந்த நல்ல 4 மதங்கள் கொண்ட மக்கள் வாழ்கின்றார்கள். இந்த நாட்டையும் மக்களையும் கெட்ட சிந்தனை கொண்டவா்களே மேலும் ஒரு சிரியா, ஈராக் போன்று ஆக்குவதற்கு முயற்சிக்கின்றனா். மீண்டும் இந்த நாட்டில் ஒரு யுத்தம் ஏற்பட்டால் இந்த நாட்டில் எவ்வளவு வளங்கள் சொத்துக்கள் அழியும், இயற்கை அனா்த்தம் ஏற்பட்ட உடன் இந்த நாட்டு மக்கள் உடன் வந்து உதவுவதை நாம் கண்கூடாக்க் கண்டோம்.இனம் மதம் பார்க்கவில்லை . நல்ல மக்கள் இந்த நாட்டில் வாழ்கின்றார்கள்.

2abegh 2abf

LEAVE A REPLY