பாத்யா மாவத்தை பள்ளிவாசல் விஸ்தரிப்பு சில தினங்களில் பூர்த்தியாகும்

0
197

pathiya palliதெஹி­வளை பாத்யா மாவத்­தையில் அமைந்­துள்ள பள்­ளி­வா­சலின் விஸ்­த­ரிப்பு பணி­களை சில தினங்­களில் பூர்த்தி செய்யத் திட்­ட­மிட்­டி­ருப்­ப­தாக கொழும்பு பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ள­னத்தின் செய­லா­ளரும் ஆர்.ஆர்.டி.அமைப்பின் தலை­வ­ரு­மான சட்­டத்­த­ரணி சிராஸ் நூர்தீன் தெரி­வித்தார்.

பள்­ளி­வாசல் அமைந்­துள்ள பிர­தே­சத்தைச் சேர்ந்த பௌத்த குரு­மார்­களும் பெரும்­பான்மை இனத்­த­வர்­களும் பள்­ளி­வாசல் விஸ்­த­ரிப்­புக்கு எதிர்ப்பு தெரி­வித்­த­தை­ய­டுத்து விஸ்­த­ரிப்பு பணிகள் கொஹுவளை பொலி­ஸா­ரினால் நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்­தது.

சில நாட்­க­ளாக நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்த பள்­ளி­வாசல் கட்­டிட வேளைகள் கடந்த திங்­கட்­கி­ழமை மீண்டும் ஆரம்­பிக்­கப்­பட்­டன.

தெஹி­வளை கல்­கிசை மாந­கர சபை பள்­ளி­வாசல் கட்­டிட நிர்­மாண பணி­க­ளுக்கு சட்­ட­ரீ­தி­யாக அனு­மதி வழங்­கி­யி­ருந்த போதும் பௌத்த குரு­மார்­க­ளி­னதும் பெரும்­பான்­மை­யி­ன­ரதும் எதிர்ப்பின் கார­ண­மாக நிர்­மாணப் பணி­களை தற்­கா­லி­க­மாக நிறுத்தி வைத்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அமைச்­சர்கள் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சட்டம் ஒழுங்கு மற்றும் தெற்கு அபி­வி­ருத்தி அமைச்சர் சாகல ரத்­நா­யக்க ஆகி­யோரைச் சந்­தித்து பள்­ளி­வாசல் விவ­காரம் தொடர்பில் பேச்­சு­வார்த்தை நடாத்­தி­ய­தை­ய­டுத்து பள்­ளி­வாசல் விஸ்­த­ரிப்பு பணி­க­ளுக்கு இட­ம­ளிக்­கப்­பட்­டது.

இந்தப் பள்­ளி­வாசல் விஸ்­த­ரிப்பு வேலை­க­ளுக்­காக பள்­ளி­வாசல் நிர்­வாகம் தெஹி­வளை கல்­கிஸை மாந­கர சபை­யிடம் சட்­ட­ரீ­தி­யாக அனு­மதி பெற்­றி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது. KBB/143/2015 எனும் இலக்க கட்­டிட நிர்­மாண வரை­ப­டத்­துக்கு மாந­கர சபை­யினால் அனு­மதி வழங்­கப்­பட்­டி­ருந்­தது.

கொழும்பு பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் செயலாளர் சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் பள்ளிவாசல் விஸ்தரிப்பு தொடர்பாக எழுந்த பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உதவி ய சகலருக்கும் பள்ளிவாசல் நிர்வாகத்தின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

#Vidivelli

LEAVE A REPLY