கஞ்சாவுடன் நடமாடிய இருவர் கைது

0
11

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

Arrestகஞ்சாவுடன் வீதியில் நடமாடிய இருவரை வியாழக்கிழமை (ஜுன் 16, 2016) தாம் கைது செய்திருப்பதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

விற்பனைக்காக தம்வசம் கஞ்சா வைத்திருந்த 33 மற்றும் 23 வயதான நபர்கள் இருவரும் ஏறாவூர் தைக்கா வீதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

33 வயது குடும்பஸ்தரிடமிருந்து 5 கிராம் கஞ்சாவும் 24 வயது இளைஞரிடமிருந்து 4 கிராம் 200 மில்லிகிராம் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர்கள் வீதிகளில் உலாவந்தவாறு கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைத்ததின் பேரில் இந்தக் கைது இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY