அலவி மௌலானா ஒரு அனுபவ பொக்கிசம்: கிழக்குமாகாண முதல்வர் அனுதாபம்

0
185

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

42f2055a-c7e9-4af0-ab87-be0c677158f2அரசியல் முதுமானியும், பிரபல தொழிற்சங்கத் தலைவருமான மேல் மாகாண முன்னாள் ஆளுநருமான அஷ்ஷெய்யத் அலவி மௌலானாவின் மறைவு தொழிற்சங்கங்களுக்கும், இலங்கை மக்களுக்கும் மாபெரும் இழப்பாகும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் வெளியிட்ட அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த அனுதாபக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அலவி மௌலாவின் இழப்பு முஸ்லீம்களுக்கு மாத்திரமன்றி சிங்கள, தமிழ் மக்களுக்கும் பேரிழப்பாகும். அவர் மூவின சமூகங்களுக்கிடையே நல்லுறவையும் ஐக்கியத்தையும் வளர்ப்பதில் அரும்பாடுபட்டவர் இனங்களுக்கிடையே முரண்பாடுகள் தோற்றுவிக்கப்பட்ட காலங்களில் சமாதானத் தூதுவராக விளங்கி அப்பிரச்சனைகளை இலகுவில் கையாண்டு சுமுக நிலையை தோற்றுவித்தவர். தொழிற்சங்கவாதி ஒருவர் அரசியல் வாதியாகவுமிருந்து பணியாற்றுவதென்பது இலகுவான காரியமல்ல.

ஆனால் அலவி மௌலானா அமைச்சராகவும், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராகவும் இருந்து, தனது இறுதிக் காலப் பகுதியில் மேல்மாகாண ஆளுநராகவும் பணிபுரிந்தவர். அவர் மக்கள் நலனை மையமாக வைத்தும் தொழிலாளர்களின் உரிமைகள் பாதிக்கப்படாதவகையிலும் தனது பணிகளை செவ்வனே மேற்கொண்டவர். எப்போதும் சிரித்த முகத்துடனே விளங்கும் அவர் எவர் எது கேட்டாலும் முடியாது என்று கூறியதில்லை தன்னால் முடிந்தவரை மக்களுக்கு தொண்டாற்றியுள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகர் அஷ்ரபுடன் மிக நெருக்கமான உறவைக் வளர்த்துக்கொண்ட அலவிமௌலானா அவரது அரசியல் பணிகளுக்கும் சமூகப் பணிகளுக்கும் உத்வேகமாக இருந்தார்.

அதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கையில் தீவிர பற்றுக்கொண்டிருந்தார். அன்னாரின் மறைவையிட்டு துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் தொழிற்சங்க உலகுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கின்றேன்.

LEAVE A REPLY