மட்டு மாவட்டத்தில் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில் மாதிரிப்பரீட்சை இலவச வினா விடைதாள் வழங்கி வைப்பு

0
177

450ae34d-054c-4965-bf07-f53375e1f302(விசேட நிருபர்)

கல்வி அபிவிருத்தி ஒன்றியம் இவ்வாண்டு (2016) ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில் மாதிரிப்பரீட்சை இலவச வினா விடைதாளை மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பாடசாலைகளுக்கு வழங்கி வருகின்றது.

இந்த திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலைக்கான மாதிரிப்பரீட்சை வினா விடைதாள் வியாழக்கிழமை (16.6.2016) கல்வி அபிவிருத்தி ஒன்றியத்தின் இணைப்பாளர் ஏ.எல்.எம்.மீராசாகிபினால் மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலையின் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் வகுப்புக்கு பொறுப்பான பொறுப்பாசிரியரிடத்தில் கையளிக்கப்பட்டது.

ஏற்கனவே இவ்வினா விடைத்தாள் வழங்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பாடசாலைகளில் அந்த மாதிரி பரீட்சையை நிறைவு செய்த மாணவர்கள் பெற்றுக் கொண்ட பெறுபேறுகளை தமது பாசடாலை அதிபர்களின் ஊடாக வலயக் கல்வியலுவலகங்களில் ஒப்படைக்குமாறு கல்வி அபிவிருத்தி ஒன்றியத்தின் இணைப்பாளர் ஏ.எல்.எம்.மீராசாகிப் தெரிவித்தார்.

இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு 0772381455 எனும் கையடக்க தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு இணைப்பாளர் மீராசாகிப் மேலும் தெரிவித்தார்

LEAVE A REPLY